அள்ளி தரும் ஏர்டெல்.. பட்ஜெட் விலை.. வாய்ஸ் கால்கள்.. ஒரு வருசத்துக்கு கவலை இருக்காது..
ஜியோவுக்கு அடுத்து பல கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் சிறந்த சேவையை வழங்குவதோடு கம்மி பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த திட்டம் மூலம் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அழைப்பு நன்மையை மட்டுமே விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது.
அதேபோல் ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்க. ஒருவேளை 365 நாள் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. இப்போது ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications