வருஷத்துக்கு ஒரே ரீசார்ஜ் போதும்.. பட்ஜெட் விலை.. வாய்ஸ் கால்கள்.. 30ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?
ஜயோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த திட்டம் மூலம் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது.
மேலும் இந்த ஏர்டெல் ரூ 1849 திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது.
குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த இரண்டு ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை பட்ஜெட் விலை ஓடிடி, டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 18-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) சந்தா இதில் கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
