Home
News

கீழ வந்துதான ஆகனும்! ரூ.200-க்கு இறக்கிய Airtel.. இனிமே கஸ்டமர்கள் குஷிதான்.. எதிர்பார்த்த மலிவு விலை திட்டம்!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம், டெலிகாம் கட்டண உயர்வுக்கு பிறகு படாதபாடுபட்டு வருகிறது. பழைய கஸ்டமர்கள் மற்ற டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கு மாறவில்லை என்றாலும், செகண்டரி சிம் கார்டுகளாக (SIM Cards) வேறு நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்க தொடங்கவிட்டனர். அதே நேரத்தில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு செல்லும் புதிய கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, மலிவான விலையிலான திட்டங்களுக்கே இப்போது தேவை இருக்கிறது. இப்படிப்பட்ட திட்டத்தை ஏர்டெல் களமிறக்கி இருக்கிறது.

இப்போதைக்கு ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மிகவும் மலிவான விலைக்கு ரூ.199 மதிப்பிலான திட்டமே இருக்கிறது. ஆனால், இதில் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல 2 ஜிபி டேட்டாவை மட்டுமே கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், ரூ 219 திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகளை கொடுத்துள்ளது. மலிவான பெஸ்ட் இதுதான்.

கீழ வந்துதான ஆகனும்! ரூ.200-க்கு இறக்கிய Airtel.. இனி கஸ்டமர்கள் குஷி!

ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Prepaid Plan) ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன. அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், டாக்டைம் (Talktime) மற்றும் கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தலாம்.

இந்த 3 ஜிபிக்கு போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது. வேலிடிட்டி அதிகமாக கொடுக்கப்படுவதால், இந்த சலுகை கிடைக்கவில்லை. ஆனால், வாய்ஸ் கால் சலுகையில் எந்தவித குறையும் கிடையாது. ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) தடையின்றி செய்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. லிமிட் இல்லாமல் தேவைக்கு ஏற்ப இந்த எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகை போக பிரத்யேக சலுகையாக ரூ 5 மதிப்பிலான டாக்டைம் கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மட்டுமே மலிவான விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் சலுகைகளை கொடுக்கிறது. வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். இதேபோல 30 நாட்கள் வேலிடிட்டியில் மேலும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. இந்த 30 நாட்கள் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் ரூ 355 திட்ட விவரங்கள் (Airtel Rs 355 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 25 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்களை தினமும் செய்து கொள்ளலாம். அப்பல்லோ 24|7 சர்க்கிள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 589 திட்ட விவரங்கள் (Airtel Rs 589 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 219 Plan With 30 Days Validity 3GB Data Unlimited Voice Calls Check Cheapest Monthly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X