Home
News

Airtel, Jio சிம் ஆக்டிவ்.. இனி ரூ.209-க்கு 30 நாட்கள்.. ரூ.189-க்கு 28 நாட்கள்.. வேல்யூ திட்டத்தை விட்ராதீங்க!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனங்களின் சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வேல்யூ திட்டங்கள் (Value Plans) அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை போல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் சிம் கார்டு ஆக்டிவ் (SIM Card Active) கொடுக்கும் திட்டங்களாக இவை இருக்கின்றன. இப்படி மலிவான விலைக்கு கிடைக்கும் 3 வேல்யூ திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஒரே போனில் 2 சிம் கார்டு இருக்கு, அதுல ஒரு சிம் கார்டில் மட்டும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் அனுப்புறோம். ஆனால், செகண்டரி சிம் கார்டு சும்மதான் இருக்கு. இருந்தாலும், அதுல இன்கம்மிங் கால் வரும். அதுனால, மலிவான விலைக்கு ஏதாவது திட்டம் இருந்தா சொல்லுங்க, சலுகைகள் பெருசா ஒன்னும் வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 3 திட்டங்கள் இருக்கின்றன.

Airtel, Jio சிம் ஆக்டிவ்.. ரூ.209-க்கு 30 நாள்.. ரூ.189-க்கு 28 நாள்!

ஜியோ ரூ 189 திட்டம் (Jio Rs 189 Plan), ஏர்டெல் ரூ 199 திட்டம் (Airtel Rs 199 Plan) மற்றும் ஏர்டெல் ரூ 219 திட்டம் (Airtel Rs 219 Plan) ஆகியவற்றில் வேல்யூ சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவுக்கு மட்டுமே இந்த திட்டங்கள் பிரத்யேகமாக கிடைக்கின்றன. டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் போதுமான அளவுக்கு மட்டுமே வருகின்றன.

ஜியோவில் ரூ 189 திட்டத்துக்கு அடுத்து ரூ.479 மதிப்பிலான வேல்யூ திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால், ஏர்டெல்லில் ரூ 189 திட்டத்துக்கு அடுத்து ரூ 219 விலையிலேயே வேல்யூ திட்டம் இருக்கிறது. இப்போது, ஒவ்வொரு திட்டத்திலும் கிடைக்கும் சலுகைகளை பார்த்துவிடுவோம். ஜியோவின் ரூ 189 மதிப்பிலான வேல்யூ திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்களும் எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கிடைக்கும். டேட்டா சலுகையானது முன்போ சொன்னது போல குறைவாக இருக்கும். 2 ஜிபி டேட்டா லம்ப்-சம் முறையில் கொடுக்கப்படும். இந்த டேட்டாவானது தினசரிக்கு கிடையாது 28 நாட்கள் முழுவதுக்கும் பொருந்தும்.

அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கொடுக்கப்படாமல், 28 நாட்களுக்கும் சேர்ந்து 300ஆக வழங்கப்படும். இப்போது, ஏர்டெல் ரூ 199 திட்டத்துக்கு செல்லலாம். இந்த ஏர்டெல் சிம் ஆக்டிவ் திட்டம் கிட்டத்தட்ட ஜியோவின் திட்டத்தை போலவே சலுகைகளை கொடுக்கிறது. ஆனால், எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் தினசரி சலுகையை கொடுத்து கஸ்டமர்களை கவர்கிறது.

ஆகவே, முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், எஸ்எம்எஸ்களை மட்டும் 100 வீதம் நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.10 விலை அதிகமாக கிடைத்தாலும் எஸ்எம்எஸ் சலுகைகளை தினசரிக்கு இந்த ஏர்டெல் திட்டம் கொடுக்கிறது.

இதே ஏர்டெல்லில் கூடுதலாக ஒரு வேல்யூ திட்டம் இருக்கின்றன. இது ரூ 219 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப கூடுதல் வேலிடிட்டியை கொடுக்கிறது. ஆகவே, இந்த ஏர்டெல் வேல்யூ திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் உங்களுக்கு சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் சலுகைகள் கிடைக்கும்.

டேட்டாவும் கூடுதலாக வருகிறது. அதாவது, முந்தைய திட்டங்களில் 2 ஜிபி மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடையாது. 300 ஆக லம்ப்-சம் முறையில் கிடைக்கிறது. கூடுதலாக இந்த ஏர்டெல் வேல்யூ திட்டத்தில் ரூ.5 மதிப்பில் டாக்டைம் பெற்று கொள்ள முடிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 219 Plan Vs Jio Rs 189 Plan With Unlimited Voice Calls Lumpsum Data Check SIM Active Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X