Home
News

அதான் ஏர்டெல்.. 1ஜிபிக்கு ரூ.209 முதல் ரீசார்ஜ்.. 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இதைவிட்ட வேற கிடையாது!

ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா சலுகை கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், இந்த 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இந்த 3 திட்டங்களிள் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன? வேலிடிட்டி எப்படி? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

ஏர்டெல் நிறுவனமானது, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகைகளுடன் ரூ 209, ரூ 239 மற்றும் ரூ 265 விலையில் மூன்று திட்டங்களை வைத்திருக்கிறது. இந்த திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன. முதலில் ரூ 209 திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.

அதான் ஏர்டெல்.. 1ஜிபிக்கு ரூ.209 முதல் ரீசார்ஜ்.. மூன்றே 3 திட்டங்கள்!

ஏர்டெல் ரூ 209 திட்ட விவரங்கள் (Airtel Rs 209 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மொத்தமாக 21 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையும் வருகிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை இதில் கிடையாது. தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

தினசரி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை (National Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 239 திட்ட விவரங்கள் (Airtel Rs 239 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தை போலவே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹலேடியூன்ஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் மொத்தமாக 24 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே விங்க் மியூசிக், ப்ரீ ஹலேடியூன்ஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 265 திட்ட விவரங்கள் (Airtel Rs 239 Plan Details): ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 1 ஜிபி டேட்டா திட்டங்களில் அதிகப்படியான சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்துக்கு மற்ற திட்டங்களை விட கூடுதலாக 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. முந்தை திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் விங்க் மியூசிக், ப்ரீ ஹலேடியூன்ஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ரூ 300 பட்ஜெட்டுக்குள் நல்ல திட்டங்கள் வேண்டுமானால், இந்த 1 ஜிபி திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இதிலும் கூடுதல் டேட்டா நன்மை வேண்டுமானால், 5ஜி சலுகை இருக்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 209 Plan Offers 21 Days Validity, 1GB Data, Unlimited Voice Calls Check 1GB Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X