Home
News

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு தீபாவளி டபுள் குஷி.. ரூ.200-க்கு இறங்கி வந்த ரீசார்ஜ்.. டேட்டா, ஓடிடி, 28 நாட்கள் சேவை!

ஜியோ (Jio) நிறுவனத்துக்கு போட்டி கொடுக்கும்படி ரூ.200 விலைக்கு ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. லைவ் டிவி சேனல்களை ஜியோ கொடுக்கும விலைக்கு ஏர்டெல் நிறுவனம் என்னென்ன சலுகைகளை கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஜியோ நிறுவனம் ரூ.200 விலைக்கு டேட்டாவுடன் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. இதற்கு போட்டியாக அதே ரூ.200 விலைக்கு பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் டேட்டாவை ஏர்டெல் நிறுவனமும் கொடுக்கிறது. முதலில் ஜியோவில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம். அப்போதுதான் எது அதிக சலுகைகள் என்பது தெரியவரும்.

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு தீபாவளி டபுள் குஷி.. ரூ.200-க்கு இறங்கி வந்த?

ஜியோ நிறுவனத்தின் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 200 Prepaid Plan): 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ஜியோ ரூ.200 திட்டம் கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஓடிடி ஆப்களை பார்த்தால், யூடியூப் பிரீமியம் (YouTube Premium) கிடைக்கிறது.

மேலும், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) உள்ளது. இதை மைஜியோ ஆப்பில் கிளைம் செய்து பயன்படுத்த வேண்டும். மேலும், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), சன்நெக்ஸ்ட் (SunNXT), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play) மற்றும் டிஸ்கவரிபிளஸ் (Discovery+) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

மேலும், கான்ச்சா லங்கா (Kanccha Lannka), ஈடிவி வின் (ETV Win), சாவ் பால் (Chaupal) மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கான ஃபேன்கோட் (FanCode) சந்தா கிடைக்கும். தாரங் பிளஸ் (Tarang Plus), டைம்ஸ் பிளே (Times Play) & ஹோய்சோய் (Hoichoi) ஆப்களையும் இந்த ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. சலுகைகள் இன்னும் முடியவில்லை.

1000+ லைவ் டிவி சேனல்கள் ( Live TV Channels) கிடைக்கும். ஜியோஸ்டார், சோனி, சன்டிவி, டிஸ்கவரி மற்றும் ஈடிவி ஆகிய நெட்வொர்க்குகளின் லைவ் டிவி சேனல்களை பெற்று கொள்ளலாம். இதுபோக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தாவும் இந்த ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. கூக்கு டிவி ஆப் சந்தாவும் கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 200 Prepaid Plan): அதே 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ஏர்டெல் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஓடிடி சந்தாவை பார்க்கையில், யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) கிடைக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஜீ5 பிரீமியம் (Zee5 Premium) சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவையும் இந்த ஏர்டெல் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப்பில் மட்டுமே 18+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்த முடியும்.

ஆகவே, இதில் ஜியோவில் கிடைத்ததை போலவே சோனிலிவ் (SonyLiv), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கின்றன. ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal), சன்நெக்ஸ்ட் (SunNxt) உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கின்றன. மேலும், ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.

இந்த ஓடிடி ஆப்களை தனித்தனியாக பெற்றால், அதிக செலவாகும். ஆனால், ஏர்டெல்லில் ரூ.200 விலைக்கு கிடைக்கிறது. தீபாவளிக்கு முன்பே இந்த திட்டம் களமிறங்கி இருப்பதால், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜியோவில் கிடைக்கும் லைவ் டிவி சேனல்கள் மட்டும், இந்த திட்டத்தில் கொடுக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Airtel Rs 200 Plan With Jio Rs 200 Plan With YouTube Premium Plan Check OTT TV Channels Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X