Home
News

கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. 1000+ TV சேனல்.. ரூ.200 போதும்.. 28 நாட்கள் சந்தா.. 14+ ஓடிடி.. 30ஜிபி டேட்டா!

ஸ்மார்ட்போன்கள் வந்தவுடன் கேபிள் டிவி (Cabel TV), டிடிஎச் (DTH) பார்க்க முடியாமல் போனது. ஆனால், ஜியோ (Jio) நிறுவனம் ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் மீண்டும் டிவி சேனல்களை பார்க்க வைக்கும்படி வெறும் ரூ.200 விலை கொண்ட திட்டத்தில் 1000+ லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது. இதே விலையில் ஏர்டெல் (Airtel) நிறுவனமும் ஓடிடி திட்டத்தை கொடுக்கிறது.

ஆனால், பிரீமியம் ஓடிடி ஆப்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் போஸ்ட் டேட்டா உள்ளிட்டவற்றில் ஜியோ முந்துகிறது. இருப்பிரும், இந்த ரூ.200 விலைக்கு என்னென்ன சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்கின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. 1000+ TV சேனல்.. வெறும் ரூ.200 போதும்!

ஏர்டெல் ரூ.200 திட்ட விவரங்கள் (Airtel Rs 200 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி சந்தா கொண்ட திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். போஸ்ட் டேட்டா கிடைக்காது. ரூ.149 மதிப்புள்ள ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும்.

மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கிடைக்கும். இதில் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட்பிளே (Liongate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal) மற்றும் சன்நெக்ஸ்ட் (SunNxt) உள்ளிட்ட 18+ ஓடிடி ஆப்கள் கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்தை தூக்கி சாப்பிடும்படி ஜியோ ரூ.200 திட்டம் இருக்கிறது.

ஏனென்றால், ஜியோஹாட்ஸ்டார் திட்டம் மட்டுமே இதில் பிரீமியம் ஓடிடி சந்தாவாக இருக்கிறது. ஆனால், ஜியோ திட்டத்தில் யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ மொபைல் உள்ளிட்ட பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 30 ஜிபி டேட்டா போக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையையும் இந்த திட்டம் கொடுக்கிறது.

கூடுதலாக 1000+ லைவ் டிவி சேனல்களை இந்த ஜியோ ரூ.200 திட்டம் கொடுத்து இருக்கிறது. இதில் சோனிஎன்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (Sony Entertainment Network), சன்டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி (Discovery), ஈடிவி நெட்வொர்க் (ETV Network) உள்ளிட்டவையும் கொடுக்கப்படும்.

ஜியோ ரூ.200 திட்ட விவரங்கள் (Jio Rs 200 Plan Details): இந்த டேட்டா, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களை கொண்ட திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் ஏர்டெல்லில் கொடுக்கப்பட்டத்தை போலவே 30 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், இந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். மேலும், சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் உள்ளது.

இதுபோக கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கேட் (FanCode) மற்றும் ஜியோ டிவி (JioTV) வருகிறது. ஜியோஸ்டார் வழியாக 1000+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதுபோக ஜியோடிவி வழியாகவும் லைவ் டிவி சேனல்களின் அணுகல்கள் கிடைக்கும்.

மைஜியோ (MyJio) ஆப் வழியாக யூடியூப் பிரீமியம் சந்தாவை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதேபோல அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தாவையும் ஆக்டிவேட் செய்யலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை பெற மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்தாலே போதும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 200 Plan With 30GB Data 28 Days Validity 19 OTT Apps Vs Jio Rs 200 Plan 1000 TV Channels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X