ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஏர்டெல் பயனர்கள் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் இப்போது ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ஒரு மாதத்திற்கான இலவச சோதனை, விங்க் மியூசிக், ஷா அகாடமி, ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். இதுதவிர தற்போது இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த
திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கவில்லை. இப்போது தான் இந்த ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் அசத்தலான திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் பிரைம் மெம்பர்ஷிப்பும் 56 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Thanks நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Thanks நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள்உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Prime Video Mobile Edition, Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Prime Video Mobile Edition, Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications