Airtel-க்கு முடிஞ்சது.. இனிமே ரூ.200 இல்ல.. மாசம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படியான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 365 நாட்கள் வேலிடிட்டி (365 Days Validity) மட்டுமல்லாமல், 2ஜிபி டேட்டா (2GB Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எக்ஸ்ட்ரீம் ஓடிடியை (Xstream OTT) அடிமட்ட விலைக்கு பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமானது களமிறக்கி இருக்கிறது. இதனால், ஏர்டெல் கஸ்டமர்கள் ஒரு வருடத்துக்கான ரீசார்ஜ் முடிச்சாச்சுபா என்று பெருமூச்சி விடுகின்றனர். இத்திட்ட விவரங்கள் இதோ.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் ரீசார்ஜ் கட்டணங்களின் விலை ஏற்றப்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட ஏர்டெல் நிறுவனம், அடிமட்ட விலையிலான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை கொடுத்து கஸ்மர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. மாதத்துக்கு ரூ.200 கூட செலவில்லாமல், வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் வருகின்றன.

அதேபோல ஓடிடி சலுகையைும் விலைக்கு ஏற்ப கொடுத்து இருக்கிறது. ஆகவே, கஸ்டமர்கள் வருடம் முழுவதும் கம்மியான விலைக்கு சலுகைகளை பெற இந்த ஏர்டெல் ரூ 1999 ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Rs 1999 Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் கூடுதலாக இப்போது சலுகைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பார்ப்போம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியில் லம்ப்-சம் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், எக்ஸ்ட்ரீம் ஓடிடி மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, டேட்டா சலுகையானது மாதத்துக்கு 2 ஜிபி கணக்கில் லம்ப்-சம் முறையில் 24 ஜிபியாக கொடுக்கப்பட்டுள்ளது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடையாது.
இந்த டேட்டா சலுகை மட்டுமே இதில் உங்களுக்கு குறையாக தெரியும், ஆனால், வாய்ஸ் கால்கள் சலுகை அப்படி இல்லை. 1 வருடம் முழுவதும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த 1 வருடம் கூடவே சிம் ஆக்டிவ் சலுகையும் கிடைத்துவிடுகிறது.
இந்த சிம் ஆக்டிவுக்கு மாத செலவை பார்த்தால் வெறும் ரூ.166 மட்டுமே தேவையாக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டம் மற்ற எந்த திட்டங்களையும்விட மலிவாகவே இருக்கிறது. அதாவது, ஒரு வருடத்துக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில், இதைவிட கம்மியான திட்டம் இல்லை. இந்த திட்டத்தில் விலை மாற்றம் செய்வதற்கு முன்பு 3600 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம்மாக வந்தது.
இது 365 நாட்களுக்கும் பொருந்தும். அதற்குள் முடித்துவிட்டால், கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஆனால், இப்போது நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் என்ற கணக்கில் மாற்றப்பட்டுவிட்டது. இது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கூடுதல் நன்மையாகும். அதேபோல ஸ்பேம் கால் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே சரியாக இருந்தாலும், எக்ஸ்ட்ரீம் ஓடிடி ஆப் சந்தாவையும் கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. ஆனால், இது பிரீமியம் கிடையாது. அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இப்போது, ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளுக்கு வருவோம். இதில் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை (மூன்று மாத மெம்பர்ஷிப்) கிடைக்கிறது.
ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை கிடைக்கிறது. இதை விங்க் மியூசிக் மூலம் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு அடுத்தப்படியாக இருக்கும் சலுகைகள் முடிந்து போன பிறகு அதற்கு கட்டணங்கள் இருக்கும். பிஎஸ்என்எல்லை போல வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








