Home
News

தூக்கி சாப்பிட்ட Airtel.. மாதம் ரூ.170-க்கும் கம்மி.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்.. லம்ப்சம் டேட்டா!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு அதன் கஸ்டமர்கள் எந்த திட்டத்தில் மலிவான விலைக்கு அதிக சலுகைகள் கிடைக்கிறது, அதிக டேட்டாலாம் வேண்டாம், சிம் ஆக்டிவா இருந்தா போதும், அதே நேரத்துல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் இருந்தா பரவாயில்ல என்று அலசி ஆராய்ந்து பார்த்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதுபோன்ற கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான திட்டம் களமிறங்கி இருக்கிறது. மாதம் வெறும் ரூ.166 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது.

இந்த மலிவான 365 நாட்கள் திட்டத்தில், லம்ப்-சம் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகள் வருகின்றன. சொல்லப்போனால், ஏர்டெல் நிறுவனத்தில் மிகவும் மலிவான விலைக்கு வருடம் முழுவதும் சலுகைகளை கொடுக்கும் ஒரே திட்டம் இதுவாகும். இதுபோக ஓடிடி சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.

தூக்கி சாப்பிட்ட Airtel.. மாதம் ரூ.170-க்கு கம்மி.. 365 நாட்கள் சேவை!

ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Prepaid Plan) அதிகப்படியான டேட்டா சலுகையை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், முற்றிலும் டேட்டா கிடைக்காது என்றும் சொல்லிவிட முடியாது. 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆனால், 365 நாட்களுக்கும் இந்த டேட்டாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கூடுதலாக டேட்டா கிடைக்காது. இருப்பினும், வாய்ஸ் கால்கள் சலுகையில் எந்தவித குறையும் இருக்காது. அதாவது, வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வருடம் முழுவதும் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன. அதாவது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக வரும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகையை கஸ்டமர்கள் பெறலாம்.

மேற்கண்ட சலுகைகள் மட்டுமல்லாமல், டிவி ஷேக்கள், மூவிஸ் மற்றும் லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) ஆப் சந்தா கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகளும் மாதம் வெறும் ரூ.166 செலவில் கிடைக்கிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டம் நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கிறது.

மலிவான விலையில் 365 நாட்களுக்கும் சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே போதும் என்று கேட்கும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்காவா தேர்வாக இருக்கும். இப்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்தில் மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டம் இது மட்டுமேயாகும்.

ஏர்டெல் கட்டணங்கள் அதிகரிப்புக்கு முன்னதாக இந்த திட்டத்தின் விலை ரூ.1799ஆக இருந்தது. இப்போது, ரூ.1999ஆக விலை ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும், விலைக்கு ஏற்றத்துக்கு ஏற்ப எஸ்எம்எஸ் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முன்பு 3600 எஸ்எம்எஸ் மொத்தமாக கொடுக்கப்பட்டது. இப்போது, நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் என்று மாற்றப்பட்டுள்ளது.

ஜியோவிலும் இதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவுக்காக மட்டுமே மலிவு விலை வருடாந்திர திட்டம் இருக்கிறது. ஆனால், ரூ.1889 விலைக்கு கிடைக்கிறது. இதற்கேற்ப 336 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டியை பெற்று கொள்ள முடியும். 24 ஜிபி டேட்டா மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஜியோ ஆப்களையும் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1999 Plan With Unlimited Voice Calls 24GB Lumpsum Data Check Cheapest 365 Days Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X