இறங்கி அடித்த Airtel.. மாதாந்திரம் ரூ.166-க்கு இறக்கிய 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 24GB டேட்டா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு இதைவிட அடிமட்ட விலைக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 24 ஜிபி டேட்டா (24GB Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்காது. ஏர்டெல் வருடாந்திர திட்டத்துக்கு (Airtel Yearly Plan) செல்ல திட்டமிட்டால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மாதாந்திரம் ரூ.166 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி (365 Days Validity) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்கள் இதோ.
டெலிகாம் (Telecom) கட்டண உயர்வுக்கு பிறகு மாதத்துக்கு ரீசார்ஜ் (Monthly Recharge) செய்வதைவிட வருடத்துக்கு ரீசார்ஜ் (Yearly Recharge) செய்யும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஏனென்றால், வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாத கட்டணம் குறைவாக இருக்கிறது. அதாவது, ஏர்டெல்லில் ரூ.199 விலையிலான ப்ரீபெய்ட் திட்டமே (Prepaid Plan) அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது.

ஆனால், ரூ.1999 மதிப்பிலான வருடாந்திர திட்டத்தை (Rs 1999 Yearly Plan) ரீசார்ஜ் செய்தால், மாதத்துக்கான செலவு வெறும் ரூ.166ஆக மட்டுமே செலவாகிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த ஒரு வருட திட்டத்தில் (One Year Plan) வாய்ஸ் கால்கள் சலுகை வரி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்கள் கிடைக்கிறது. மேலும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த வாய்ஸ் கால்களை 365 நாட்களுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், டேட்டா சலுகை அப்படி கிடையாது. 365 நாட்களுக்கும் சேர்த்து 24 ஜிபி டேட்டா (24GB Data) மட்டுமே கிடைக்கும். ஆகவே, மாதத்துக்கு 2 ஜிபி வீதம் அல்லது தேவைக்கு ஏற்ப முழுவதும்கூட இந்த டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டும்.
கட்டண உயர்வுக்கு முன்பு டேட்டாவை போலவே லம்ப்-சம் (Lump-Sum) சலுகையாக எஸ்எம்எஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களாக கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் தினசரிக்கு எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு ஏற்ற வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது.
இந்த சலுகைகளே விலைக்கு ஏற்ப இருக்கின்றன. ஆனால், கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவை இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சலுகையும் 365 நாட்களுக்கும் கிடைக்கிறது. மூவிஸ், ஷோக்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களை இந்த எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா மூலம் பார்த்து கொள்ளலாம்.
இந்த ஓடிடி சந்தா போக 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா கொடுக்கப்படுகிறது. இறுதியாக விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் போதும், வேறு சலுகைகள் எதுக்கு என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த பக்காவான தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








