Home
News

மினிமம் ரீசார்ஜ்.. 1 வருடத்துக்கு மாசம் ரூ.166 போதும்.. Jio, Airtel இறக்கிய திட்டம்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!

இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டும் கட்டண உயர்வுக்கு பிறகு வருடாந்திர திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளன. இப்போது, மினிமம் விலைக்கு தலா ஒரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை (Yearly Prepaid Plan) களமிறக்கியுள்ளன. இந்த திட்டங்கள் மாதத்துக்கு ரூ.166 செலவில் கிடைக்கின்றன. இருப்பினும், 2 திட்டங்களின் இடையே சலுகைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரங்களையும் பார்த்துவிட்டு பெஸ்ட்டை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

ஏர்டெல் நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ.166 செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக ரூ.1999 திட்டம் இருக்கிறது. ஆனால், ஜியோவில் மாதம் ரூ.172 செலவில் மினிமம் வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. எது பெஸ்ட் என்பதை கண்டுபிடிப்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது என்றுகூட சொல்லலாம்.

மினிமம் ரீசார்ஜ்.. 1 வருடத்துக்கு மாசம் ரூ.166 போதும்.. Jio, Airtel..!

ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் (Airtel Plan) 365 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் தினசரி டேட்டா சேவை கிடைக்காது. இருப்பினும், 24 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்காது. ஆகவே, டேட்டா வவுச்சர் தேவைப்படலாம்.

இருப்பினும், 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த எஸ்எம்எஸ் சலுகையானது, விலையேற்றத்துக்கு முன்பு மொத்தமாக 3600ஆக கிடைத்தது.

இந்த டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு பிறகு, 3 மாதங்களுக்கான மெம்பர்ஷிப் கொண்ட அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக ஏர்டெல்லில் பிரத்யேகமாக கிடைக்கும் விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகைகளும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

இதோடு சலுகைகள் முடியவில்லை. ஓடிடி பிரியர்கள் விரும்பும் வகையில், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் டிவி ஷேக்கள், மூவிஸ் மற்றும் லைவ் டிவி சேனல்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ள முடியும். இப்போது, ஜியோவில் கிடைக்கும் மினிமம் விலை கொண்ட வருடாந்திர திட்டத்தை பற்றி பார்ப்போம்.

ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த திட்டமானது, ஏர்டெல் நிறுவனத்தை விட மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆனால், 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே இதிலும் 24 ஜிபி டேட்டா சலுகை மட்டுமே வருகிறது. இருப்பினும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது.

இது ஏர்டெல்லில் கிடையாது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் 336 நாட்களுக்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி எஸ்எம்எஸ் சலுகை கிடையாது. மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் கொடுக்கப்படுகிறது. ஓடிடி பிரியர்களுக்கு ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) ஆப்கள் கிடைக்கின்றன.

மேலும், ஜியோகிளவுட் (JioCloud) ஆப் வருகிறது. ஆகவே, 2 திட்டங்களும் விலைக்கு ஏற்ப சலுகைகளை கொண்டிருக்கின்றன. ஆகவே, அதை வைத்து பார்க்கையில் ஒரே மாதிரியாகவே தெரிகின்றன. இப்போது பார்த்த இரண்டு வருடாந்திர திட்டங்களிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடையாது. அதேபோல 4ஜி டேட்டாவும் குறைவாக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1999 Plan With 365 Days Validity Unlimited Calls Vs Jio Rs 1899 Plan Cheapest Yearly Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X