Jio-வுக்கு செக் வைத்த Airtel.. தினம் ரூ.5 இருந்தால் போதும்.. 1 வருடம் நோ-டென்ஷன்.. அள்ளித்தரும் Airtel..
இந்தியாவின் இரண்டாம் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (New airtel prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இத்தகைய ஒரு திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்யாமல் இருந்தது ஆச்சரியத்திற்குரியது. சமீபத்தில், ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல புதிய நீண்ட கால திட்டங்களை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய 365 நாள் திட்டத்தை (Airtel 365 days validity plan) அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (private telecom companies) அவற்றின் அணைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கண்முடித்தனமாக அதிகரித்தன. இதன் விளைவாக மக்கள் பலரும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை தேடி, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு மாறத்துவங்கினர். இந்த மாற்றத்தினால், தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பல லட்சம் வாடிக்கையாளர்களை கடந்த சில மாதங்களில் இழந்துள்ளன.

Jio-வுக்கு செக் வைத்த Airtel.. தினம் ரூ.5 இருந்தால் போதும்.. 1 வருடம் நோ-டென்ஷன்:
இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் திரும்ப பெரும் நோக்கத்தில், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது பல புதிய குறைந்த விலை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. இதில் மக்களை கவர்வதற்காக முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ நிறுவனம் பல புதிய மலிவு விலை திட்டங்களை தற்போது அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது.
இந்த வகையில், ஜியோ தற்போது நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டத்தை (Jio long term prepaid recharge plans) குறைந்து, நன்மைகளை அதிகரித்து வழங்கி சில கவர்ச்சிகரமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவின் போட்டியாளரான ஏர்டெல் நிறுவனம் மட்டும் சும்மா இருக்குமா என்ன? ஏர்டெல் நிறுவனமும் கூட, தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை நீண்ட வேலிடிட்டி உடன் அதிக நன்மைகள் கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் ரூ. 1999 திட்டம் (Airtel Rs 1999 Plan):
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Airtel prepaid plan) ஒரு முக்கியமான ப்ரீபெய்ட் திட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டம், ஏர்டெல் ரூ. 1999 திட்டம் (Airtel Rs 1999 Plan) என்ற விலையுடன் அணைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 365 நாளுக்கு செல்லுபடியாகும் 1 வருட வேலிடிட்டியை (Airtel 1 year validity plan) கொண்டுள்ளது.
இந்த ஏர்டெல் ரூ. 1999 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை (unlimited voice calls benefit) 1 வருடம் முழுக்க வழங்குகிறது. அதேபோல், இந்த 1 வருட காலத்திற்கு, இந்த திட்டத்தின் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் (daily 100 SMS benefit) நன்மைகளை பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நன்மை மட்டும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மொத்த டேட்டா நன்மையை தினசரி வரம்பின்றி வழங்குகிறது.
1 வருடத்திற்கு வெறும் 24GB டேட்டா மட்டும் தானா?
இந்த Airtel Rs 1999 Plan மொத்தமாக 24GB டேட்டா நன்மையை (24GB data benefit) வழங்குகிறது. அதாவது, 1 மாதத்திற்கு 2GB டேட்டா என்ற கணக்கில், 12 மாதத்திற்கு மொத்தமாக 24GB டேட்டா நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. கூடுதல் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள், தாராளமாக ஏர்டெல் டேட்டா பிளான்களை (Airtel data packs) ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தினசரி கட்டணம் ரூ. 5 மட்டுமே என்பதனால், இது சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








