Home
News

Airtel ஒரே போடு.. மாசம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 24 ஜிபி டேட்டா!

ஏர்டெல் (Airtel) சிம் கார்டு உங்களிடம் இருந்தால், மாதத்துக்கு வெறும் ரூ.166 செலவில் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான ஒரு திட்டத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தில் (Cheapest Yearly Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தொடங்கி டேட்டா, எஸ்எம்எம், ஸ்பேம் அலெர்ட் உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன

இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் (Airtel Prepaid Plan) விலை வெறும் ரூ.1999ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டியை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. இந்த விலையை மாதத்துக்கு கணக்கிட்டு பார்த்தால், வெறும் ரூ.166 மட்டுமே உங்களுக்கு தேவைப்படுகிறது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் பயன்படுத்த கிடைக்கிறது.

Airtel ஒரே போடு.. மாசத்துக்கு ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ 1999 திட்டம் வருடாந்திர வேலிடிட்டி (Airtel Rs 1999 Plan Yearly Validity): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் வழக்கம்போல கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகையில் மட்டும் பிடிப்பு இருக்கும். ஏனென்றால், இந்த திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் வருடம் முழுவதும் கிடைக்கிறது.

இருப்பினும், டேட்டா அப்படி கிடையாது. 365 நாட்களுக்கும் சேர்ந்து 24 ஜிபி மட்டுமே கொடுக்கப்படும். இதற்கு மேல் டேட்டா வேண்டுமானால், கஸ்டமர்கள் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டேட்டா வேண்டாம், சிம் கார்டு ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் போதும் என்றால், இது திட்டத்தை தவிர வேறு திட்டம் சரியாக இருக்காது. வாய்ஸ் கால்களுக்கு ஒரு குறையும் கிடையாது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு அடுத்து வரும் 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு 100 என்னும் கணக்கில் வழக்கம்போல கொடுக்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்களில் மொத்தமாகத்தான் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஆனால், இந்த வருடாந்திர திட்டத்தில் தினசரிக்கு எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த சலுகைகளோடு திட்டம் முடியவில்லை. கூடுதலாக சில முக்கிய சலுகைகளை கொடுக்கிறது. அதில் ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட்கள் அடங்கும். இந்த அலெர்ட் எந்தவித கட்டணமும் இல்லாமல், இலவசமாக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இதுவும் வருடம் முழுவதும் கிடைக்கும்.

சலுகைகள் அவ்வளவுதானா என்றால், கிடையாது. ஏர்டெல்லில் மட்டுமே கிடைக்கும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் வருகிறது. ஆனால், இந்த மெம்பர்ஷிப் மூன்று மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு திட்டத்தின் சலுகைகள் மட்டுமே கிடைக்கும். மேலும். விங்க் மியூசிக் (Wynk Music) கிடைக்கிறது. இதில், ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) பெறலாம்.

இந்த திட்டத்தில் போஸ்ட் டேட்டா கிடையாது என்பதை கஸ்டமர்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால். 24 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தி பிறகு ஒரு எம்பி டேட்டாவை பயன்படுத்தினாலும், அதற்கு 50 பைசா கட்டணமாக இருக்கும். ஆகவே, 24 ஜிபி டேட்டாவில் கவனமாக இருக்க வேண்டும். டேட்டா வவுச்சர்கள் உங்களுக்கு ஆப்ஷனாக இருக்கும்.

2025ஆம் ஆண்டில் வருடாந்திர திட்டங்களுக்கே கஸ்டமர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனென்றால், வருடாந்திர திட்டங்களுக்கு செலவாகும் மாதத் தொகை மிகவும் கம்மியாகவே இருக்கிறது. அதுவே ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்தால், அதற்கு கூடுதல் தொகையே செலவாகிறது. இதனாலேயே இப்போது மலிவு விலை வருடாந்திர திட்டங்களுக்கு கிராகி ஏற்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1999 Plan With 365 Days Validity 24GB Data Unlimited Voice Calls Here Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X