Home
News

Airtel போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24GB டேட்டா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு இதுவரையில் மாதம் ரூ.149 விலையில் கிடைத்து வந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது, இப்போது ரூ.166 விலையில் கிடைக்கப் போகிறது. இந்த விலைக்கு ஏற்ப சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மிகவும் மலிவான விலைக்கு பெற வேண்டுமானால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே நல்ல ஆப்ஷனாக இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இப்போது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் மிகவும் மலிவான வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. சொல்லப்போனால், ரூ 1799 விலையில் கிடைத்து வந்த ப்ரீபெய்ட் திட்டமே இப்போது ரூ 1999 விலையில் கிடைக்கிறது. ஆகவே, ரூ 200 அதிகரிக்கப்பட்டுள்ளது.

Airtel போட்டபோடு.. மாதாந்திரம் ரூ.166 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இது, திட்டத்தின் விலையில் 12 சதவீதமாகும். வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. மலிவான விலையிலான வருடாந்திர திட்டம் வேண்டுமானால், இதை தவிர வேறு திட்டங்கள் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடையாது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

இந்த வருடாந்திர திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது. முன்னதாக, இந்த திட்டத்துக்கு மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் என மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், டேட்டா சலுகையில் எந்த மாற்றமும் கிடையாது. ஆகவே, ரூ 1799 திட்டத்தில் வந்ததை போலவே 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 24 ஜிபிக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது. இருப்பினும், அதிவேக டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு ஏர்டெல் கஸ்டமர்கள் செல்லலாம்.

இதுபோக வழக்கமாக கிடைக்கும் சலுகைகள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா கொடுக்கப்படுகிறது. விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் 1 இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை கிடைக்கிறது. இந்த கூடுதல் சலுகைகளை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் ( Airtel Thanks App) மூலம் பெற்று கொள்ளலாம்.

இதற்கு அடுத்தபடியான மற்றொரு வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாள்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, 730 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது.

இதுபோக ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தில் எந்தவொரு டேட்டா குறையும் இருக்காது. அதேபோல வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகை தினசரிக்கு கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தாவை பெறலாம். முந்தைய திட்டத்தை போலவே விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, தினசரி டேட்டாவுக்கு இந்த திட்டத்தையும், மலிவான விலைக்கு முந்தைய திட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1999 Plan With 365 Days Validity, 24GB Data, Unlimited Voice Calls Cheapest One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X