ரூ.350, ரூ.450 ரீசார்ஜ்.. போய் வா நண்பா.. இப்போ உங்கிட்ட எந்த SIM இருந்தாலும் ரூ.200 போதும்!
இந்தியாவில் வோடபோன் ஐடியா (Vodafone Idea), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய 3 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே ரூ.200 க்கும் குறைவான விலையில் பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், இவற்றில் எது சிறந்தது என்பதே முக்கிய கேள்வி!
ஜியோ ரூ.198 விலையில் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி சேவை, தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இந்த் திட்டம் 14 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும், இதில் ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோஏஐ கிளவுட் (JioAICloud) போன்ற கூடுதல் சேவைகளை பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது.

வி என்கிற வோடபோன் ஐடியா நிறுவனமானது ரூ.199 க்கு ஒரு திட்டத்தை வழங்குகிறது. ஆனால் இதில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டில் ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதாவது மொத்தம் 300 எஸ்எம்எஸ் உடன் 2ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மையாக இதன் கீழ் வி மூவீஸ் அன்ட் டிவி (VI Movies and TV) அணுகல் கிடைக்கும்.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பொறுத்தவரை, இதிலும் ரூ.199 க்கு ஒரு திட்டம் உள்ளது. இதில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் அழைப்புகளும் கிடைக்கும். அதே சமயம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல் ரூ.199-ன் கீழ் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium), இலவச ஹலோ ட்யூன்ஸ் (HelloTunes) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஆகியவற்றை வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மூலம் சோனிலைப் (SonyLiv), எம்எக்ஸ் பிளேயர் (MX Player) போன்ற ஓடிடி (OTT) தளங்களில் உள்ள இலவச கன்டென்ட்களை மட்டுமே பார்க்க முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சரி ரூ.200 க்கும் குறைவான விலையில் சிறந்த திட்டம் எது? ரூ.200 க்கும் குறைவான விலையில் சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் பயன்பாட்டு முறையை பொறுத்தது. உங்களுக்கு அதிக இண்டர்நெட் தேவை இல்லை என்றால், மாறாக நீண்ட காலத்திற்கு வரம்பற்ற அழைப்புகளை பயன்படுத்த விரும்பினால், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ ஆகியவற்றை விட பாரதி ஏர்டெல்லின் திட்டம் சிறந்தது.
வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் திட்டங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை, ஏனெனில் இரண்டுமே 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. இருப்பினும், எஸ்எம்எஸ் வரம்பில் ஏர்டெல் முன்னிலையில் உள்ளது; இதில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் (மாதத்திற்கு மொத்தம் 3,000 எஸ்எம்எஸ்) வரை கிடைக்கும்.
ஆனால் வோடபோன் ஐடியாவில் திட்டத்தின் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் சேர்த்து மொத்தம் 300 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கிறது. கூடுதல் சேவைகளிலும் ஏர்டெல் தான் முன்னிலையில் உள்ளது. இது அடோப் எக்பிரஸ் பிரீமியம், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே நன்மைகளை வழங்குகிறது.
ஒருவேளை உங்களுக்கு டேட்டா தேவை அதிகமாக இருந்தால் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ள தயாராக இருப்பவர்களுக்கும் ஜியோ சரியான தேர்வாக இருக்கும். இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வரம்பற்ற 5ஜி இணைப்பும் கிடைக்கிறது. இதில் உள்ள ஒரே குறைபாடு என்னவென்றால், இத்திட்டம் 14 நாட்களிலேயே முடிந்துவிடும் என்பது மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications