Home
News

Airtel போட்ட போடு.. இனி ரூ.200-க்கு வருது.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. மினிமம் ரேட்ல சிம் ஆக்டிவ்!

ஏர்டெல் (Airtel) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மினிமம் ரீசார்ஜ் விலையில் சிம் ஆக்டிவ் பெறுவதற்கு ரூ.200-க்கும் கம்மியான பட்ஜெட்டில் திட்டத்தை களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது கூடுதல் விலைக்கு கிடைக்கின்றன. ஜூலை 3ஆம் தேதியில் கட்டணங்கள் அதிகரித்தால், அப்போதில் இருந்து எந்த திட்டத்தில் சிம் கார்டு ஆக்டிவ் (SIM Card Active) அதிகமாக கிடைக்கிறதோ அந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய தொடங்கிவிட்டனர்.

Airtel போட்ட போடு.. இனி ரூ.200-க்கு வருது.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்!

இப்படி பட்ஜெட் போடும் கஸ்டமர்களுக்கு வேறு சாய்ஸ் இல்லாமலேயே ஏர்டெல் ரூ.199 திட்டம் களமிறக்கப்பட்டு இருக்கிறது. மாதத்துக்கு அடிமட்ட விலையில் திட்டம் வேண்டுமானால், இதைவிட மலிவான திட்டம் ஏர்டெல்லில் கிடையாது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ஆன்டி ஸ்பேம் கால்கள் அலெர்ட் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.199 திட்ட விவரங்கள் (Airtel Rs.199 Plan Details): இந்த திட்டத்தில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் சலுகையும் அடிமட்ட விலையில் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட வாய்ஸ் கால்கள் சலுகைக்காக கிடைக்கும் பிரத்யேகமான திட்டமாகும். அதாவது, டேட்டாவை விட வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கிறது. ஆனால், தினசரி டேட்டா சலுகை கிடைக்காது. 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவை 28 நாட்களுக்கும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

இந்த 2 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இது சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்களுடன் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இருப்பினும், எஸ்எம்எஸ் சலுகைகள் குறையில்லாமல் இருக்கிறது. அதாவது, மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும்படி நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது.

இந்த சலுகைகள் போக ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes), விங்க் மியூசிக் (Wynk Music), ஸ்பேம் கால்கள் அலெர்ட் (Spam Calls Alert), ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் (Spam SMS Alert) கிடைக்கிறது. மேலும், இலவச டிவி ஷோக்கள் மற்றும் சேனல்களை பார்த்து கொள்ள ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சந்தாவும் கிடைக்கிறது.

இது ஏர்டெல்லில் குறைந்தபட்ச விலைக்கு கிடைக்கும் திட்டமாகும். இதைவிட மலிவான விலையில் வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் கிடையாது. உங்களுக்கு தினசரி டேட்டாவுடன் மலிவான திட்டம் வேண்டுமானால், 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ரூ.249 மதிப்பில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் பக்காவாக இருக்கும்.

ஏர்டெல் ரூ.249 திட்ட விவரங்கள் (Airtel Rs.249 Plan Details): முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தைவிட வேலிடிட்டி குறைவாக கிடைக்கிறது. ஆகவே, 24 நாட்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா (Daily 1GB Data) வீதம் 24 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாகும். அதேபோல 1 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. மற்ற சலுகைகளான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஸ்பேம் அலர்ட் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் போன்றவை முந்தைய திட்டத்தை போலவே கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Rs 199 Plan With Unlimited Voice Calls 2GB Data 28 Days Validity Minimum SIM Active Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X