Home
News

மினிமம் ரீசார்ஜ் இதுதான்.. வெறும் ரூ.199-க்கு முடிச்ச ஏர்டெல்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

பார்தி ஏர்டெல் (Bharti Airte) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் மினிமம் ரீசார்ஜ் வேண்டுமானால், ரூ.200 விலைக்கும் கீழ் ஒரேவொரு திட்டம் மட்டுமே கிடைக்கிறது. இந்த மினிமம் ரீசார்ஜ் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர இருப்பதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடியாக இல்லையென்றாலும், ஏற்கனவே கிடைத்து வந்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் சலுகைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. வேலிடிட்டி குறைப்பது, டேட்டா குறைப்பது உள்ளிட்டவை இருக்கலாம்.

மினிமம் ரீசார்ஜ் இதுதான்.. வெறும் ரூ.199-க்கு முடிச்ச ஏர்டெல்!

அதேபோல மலிவான விலைக்கு கிடைத்த திட்டங்கள் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. இப்படி செய்தால், விலையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே, பயன்படுத்த சலுகைகளை பெற அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஆனால், இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 திட்டமே இப்போது மினிமம் ரீசார்ஜ் கொடுக்கிறது.

ஏர்டெல் ரூ.199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): மினிமம் ரீசார்ஜ் திட்டங்களில் எப்போதும் அதிக டேட்டா கிடைக்காது. ஆகவே, இந்த திட்டத்தில் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா (2GB Data) மட்டுமே கிடைக்கும்.

இதை பயன்படுத்தி முடித்தால், போஸ்ட் டேட்டா கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். இதில் 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கொடுக்கப்படவில்லை. ஆகவே, 2 ஜிபிக்கு பிறகு டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்லலாம். டேட்டா வேண்டாம், வாய்ஸ் கால்கள் இருந்தால் போதும் என்றால், இது பக்காவான திட்டமாகவே இருக்கிறது.

ஏனென்றால், இதில் கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வழக்கம்போல அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக கூடுதலாக ஏகப்பட்ட சலுகைகளை இந்த திட்டம் கொடுத்துள்ளது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவை 12 மாதங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மினிமம் ரூ.199 ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகை போக சேப் நெட்வொர்க் சலுகை கிடைக்கிறது. அதாவது, ஸ்பேம் ஃபில்டர்கள் கிடைக்கும்.

வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்கள் மீது அலெர்ட் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் ப்ரீ வெர்ஷன் கிடைக்கிறது. இதில் சோனிலிவ் ப்ரீ வெர்ஷன் (SonyLIV Free Version), அமேசான் எம்எக்ஸ் பிளேயர் ப்ரீ வெர்ஷன் (Amazon MX Player ) உள்ளிட்டவை கிடைக்கும்.

மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் சலுகையையும் இந்த ஏர்டெல் ரூ.199 திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, மலிவான விலைக்கு என்னென்ன சலுகைகளை கொடுக்க முடியுமோ அதை கொடுத்து, கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் பேக் செய்துள்ளது. இந்த திட்டம் கட்டண உயர்வுக்கு பிறகு இருக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 199 Plan With 2GB Data Unlimited Local STD Roaming Calls 28 Days Validity 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X