மினிமம் ரீசார்ஜ்.. ரூ.200-க்கு இறக்கிய Airtel.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் கட்டணங்கள் உயர்ந்த பிறகு அடிமட்ட விலைக்கு எந்த திட்டமும் இல்லை போல என்று நினைத்த கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.200-க்கும் கம்மியான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவும் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஏர்டெல் மலிவு விலை மாதாந்திர திட்டத்தின் (Airtel Cheapest Monthly Plan) முழு சலுகைகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் கஸ்டமர்கள் மினிமம் விலையில் சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பெற வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தேவைக்கு ஏற்ப டேட்டாவும் கிடைக்கிறது. அதேபோல ஓடிடி பிரியர்களுக்காக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் ஏஐ கால்/எஸ்எம்எஸ் ஸ்பேம் அலர்ட் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (Prepaid Plan) 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் நாள்தோறும் கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை அப்படி கிடையாது. லம்ப்-சம் டேட்டாவாக (Lump-sum Data) கொடுக்கப்படும். அதேபோல போஸ்ட் டேட்டாவும் கிடைக்காது.
ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். இந்த வாய்ஸ் கால்களை போலவே நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்கள் வீதம் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஆனால், 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதே நேரத்தில் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு குறைவான வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடையாது. ஆகவே, மினிமம் விலையில் சிம் ஆக்டிவ் (SIM Active) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுக்காக மட்டும் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். கூடுதல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக விங்க் மியூசிக் (Wynk Music) ஆப் மூலம் ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) சலுகையை பெற்று கொள்ளலாம். இது பிரீமியம் சலுகைகளை வழங்காது. இருப்பினும், இலவச கன்டென்ட்களை பார்த்து கொள்ளலாம். ஒருவேளை 30 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால் பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தை போலவே லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தினசரிக்கு கிடைக்காது. தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் அனுப்பி கொள்ள முடியும். ஆனால் வாய்ஸ் கால்களுக்கு கவலை இல்லை.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 3 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் இந்த டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். கூடுதல் டேட்டாவுக்கு வவுச்சர்களுக்கு செல்லலாம். எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான் 300 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதையும் லிமிட் இல்லாமல், எப்போது தேவையோ அப்போது அனுப்பி கொள்ளலாம். வாய்ஸ் கால்களை பொறுத்த வரையில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கின்றன. அதேபோல பிரீமியம் அல்லாத கன்டென்ட்களை பார்த்து கொள்ளதற்காக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








