அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. இனி ரூ.199-க்கு 28 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. Airtel-க்கு குஷி!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு இனிமேல் அடிமட்ட விலையில் மாதாந்திர திட்டம் வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. ரூ.199 விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை வாரி கொடுத்துள்ளது. இதேபோல பல்வேறு திட்டங்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்க இருக்கின்றன. முதலில் இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): மாதாந்திர வேலிடிட்டியில் அடிமட்ட விலைக்கு திட்டம் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் இந்த திட்டம் மலிவான விலைக்கு கொடுக்கிறது. இந்த திட்டத்தை பெற்றால் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்களில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகளே விலைக்கு ஏற்ப இருக்கின்றன. ஆனால், இந்த திட்டத்துக்கு லம்ப்-சம் டேட்டா சலுகையும் வருகிறது. 2 ஜிபி டேட்டாவை லம்ப்-சம் சலுகையில் பெற்று கொள்ளலாம்.
இந்த 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் கிடைக்காது. கூடுதலாக பயன்படுத்தும் டேட்டாவுக்கு கூடுதல் கட்டணங்கள் இருக்கும். சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே பொருத்தமான திட்டமாக இது இருக்கிறது. மேற்கண்ட சலுகைகள் போக கூடுதலாக சில சலுகைகள் உள்ளது.
இதில் ஸ்பேம் கால் (Spam Call) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் (Spam SMS) அலெர்ட் கிடைக்கிறது. இதற்கு கட்டணங்கள் கிடையாது. இலவசமாகவே ஸ்பேம் அலெர்ட்களை கொடுக்கிறது. மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) சலுகைகளும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ப்ரீ-கன்டென்ட்களை மட்டுமே பார்த்து கொள்ள முடியும்.
இதைவிட ரூ.50 விலை கூடுதலாக ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அடிமட்ட விலையில் தினசரி டேட்டாவும் வேண்டுமானால், அடுத்து வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 249 திட்ட விவரங்கள் (Airtel Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ.50 விலை அதிகமாக இருந்தாலும், தினசரிக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) கொடுக்கிறது. ஆகவே, இதில் டேட்டா மட்டும் கூடுதலாக கிடைக்கும். ஆனால், 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வருகிறது.
இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல ஸ்பேம் கால் அலெர்ட், ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் ப்ரீ ஹலோடியூன்ஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கு எந்த திட்டம் பெஸ்டாக இருக்கிறது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








