Home
News

அறக்க பறக்க ரீசார்ஜ்.. ரூ.200 க்கு இறக்கிய ஏர்டெல்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா.. 28 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு ரூ.200 விலைக்கும் கம்மியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ்களை (SMS) கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் ரீசார்ஜ் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) விவரங்களை பார்க்கலாம்.

கையில் இருக்கும் கம்மியான காசை வைத்து மாதம் முழுவதும் வாய்ஸ் கால்களை கொடுக்கும் மினிமம் ரீசார்ஜ் திட்டம் வேண்டுமானால், ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது.

அறக்க பறக்க ரீசார்ஜ்.. ரூ.200 க்கு இறக்கிய ஏர்டெல்.. அன்லிமிடெட் கால்!

ஏர்டெல் ரூ. 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): மினிமம் ரீசார்ஜ் போல இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதை பெற்ற பிறகு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கிடைக்கிறது.

இப்படி வாய்ஸ் கால்கள் சலுகை கிடைத்தாலே, சிம் ஆக்டிவ் வந்துவிடுகிறது. இந்த சலுகை போக 2 ஜிபி டேட்டாவை கொண்டுள்ளது. இந்த டேட்டா மொத்தமாக கிடைக்கும் சலுகையாகும். அதாவது, 28 நாட்களுக்கும் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இதற்கு மேல் டேட்டாவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த மொத்த டேட்டா திட்டத்துக்கு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, வேலிடிட்டிக்கு முன்பே 2 ஜிபி டேட்டாவும் முடிந்து போனால், அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும், இந்த திட்டத்துக்கு 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் டேட்டாவை போலவே மொத்தமாக கிடைக்கிறது.

இந்த சலுகைகளுக்கு அடுத்து ஸ்பேம் கால்கள் (Spam Calls) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை (Spam SMS) டிடெக்ட் செய்து கொள்ள லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) இதில் கிடைக்கிறது. மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும், பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. தினசரி டேட்டாவுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

ஏர்டெல் ரூ. 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): தினசரி டேட்டாவுடன் மலிவான விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, குறைந்தபட்ச டேட்டா சலுகையுடன் இதை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

ஆகவே, மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இது முந்தைய திட்டத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. அதேபோல இதில் 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். எஸ்எம்எஸ்கள் தினமும் 100 கணக்கில் கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கொண்டுள்ளது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைக்கும். ஆகவே, ஸ்பேம் கால்கள் மற்றும ஸ்பேம் எஸ்எம்எஸ்களுக்கு லைவ் அலெர்ட் கிடைக்கும். ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தா கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 199 Plan Unlimited Local STD Roaming Calls 2GB Daily Data 28 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X