Home
News

மினிமம் ரீசார்ஜ்.. இனி ரூ.199 கொடுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. 28 நாட்கள் வேலிடிட்டி!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் மினிமம் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், வழக்கம்போல கிடைக்கும் ரூ.199 திட்டம் அல்லது ரூ.219 திட்டத்துக்கு செல்லலாம். சில திட்டங்களை ஏர்டெல் நிறுவனம், நீக்கியதை அடுத்து மினிமம் ரீசார்ஜ் எது என்று கஸ்டமர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கான திட்டங்களாக இவை இருக்கின்றன.

வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய பேசிக் சலுகைகளுடன் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டத்தை மினிமம் ரீசார்ஜ் என்று சொல்லலாம். அந்த வகையில், ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.199 திட்டம் ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதிலும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால், டேட்டா தினசரிக்கு கிடைக்காது.

மினிமம் ரீசார்ஜ்.. இனி ரூ.199 கொடுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் ரூ.199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். டேட்டா சலுகையை பார்த்தால், மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

ஆகவே, தினசரிக்கு 2 ஜிபி டேட்டா என்று நினைத்து கொள்ள வேண்டாம். 28 நாட்களுக்கும் சேர்த்து 2 ஜிபி டேட்டா கணக்கில் எடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்லலாம். எஸ்எம்எஸ் சலுகையில் எந்த மாற்றமும் கிடையாது. வழக்கம்போல நாளொன்றுக்கு 100 கணக்கில் கிடைக்கும்.

இந்த சலுகைகளுடன் கூடுதலாக சில சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் கொடுத்துள்ளது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கும். இதை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ப்ரீ-ஹேலோ டியூன்ஸ் சலுகையை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் வரும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ள முடியும்.

ஓடிடி பிரியர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கிறது. ஆனால், இதில் ப்ரீ கன்டென்ட்கள் மட்டுமே கிடைக்கும். இதைவிட கூடுதல் டேட்டாவுக்கு அடுத்து இருக்கும் ஏர்டெல் ரூ.219 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் .இதிலும் லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும். தினசரிக்கு டேட்டா கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

ஏர்டெல் ரூ.219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கும் அதே 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படாது.

மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். டேட்டா சலுகையானது மொத்தமாகவே 3 ஜிபியாக கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்காது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைக்கும். ஆகவே, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ப்ரீ-ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகைகள் உள்ளன. ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகையும் கிடைக்கிறது. இதுபோல பல்வேறு திட்டங்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Rs 199 Plan Rs 219 Plan With Unlimited Voice Calls 28 Days Validity Check Affordable Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X