இதுபோதுமே ஏர்டெல்.. வெறும் ரூ.199 பிளான்.. 3GB டேட்டா.. அன்லிமிடெட் கால்கள்.. 30 நாட்கள் வேலிடிட்டி!
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கம்மியான விலையில் சிம் ஆக்டிவ் திட்டங்கள் வேண்டும் என்றால், ரூ 155, ரூ 179 மற்றும் ரூ 199 விலையில் கிடைக்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் பக்காவான தேர்வாக இருக்கும். இந்த திட்டங்களின் முழு விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 155 திட்ட விவரங்கள் (Airtel Rs 155 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 300 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்பு, ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.
அதேபோல ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 1 ரூபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும். மிகவும் மலிவான விலையில், சிம் ஆக்டிவ் திட்டம் வேண்டும் என்றால், இந்த ரூ 155 திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 179 திட்ட விவரங்கள் (Airtel Rs 179 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் ஆப்களை பயன்படுத்தலாம்.
முந்தைய திட்டத்தைப் போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Call) செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டாவானது, டெய்லி டேட்டா கிடையாது. 28 நாட்களுக்குள் 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்தினால், அதன்பின்பு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக கொடுக்க வேண்டும்.
ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், டாக்டைம் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 3 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது.
அதோடு ரூ 5 டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம். மிகவும் கம்மியான விலையில் 30 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு டெய்லி டேட்டா தேவைப்பட்டால், ரூ 209 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள்.
ஏர்டெல் ரூ 209 திட்ட விவரங்கள் (Airtel Rs 209 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டெய்லி டேட்டா மற்றும் டெய்லி எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 21 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








