Airtel மினிமம் ரீசார்ஜ்.. ரூ.200-க்கு சர்ர்ருனு சிம் ஆக்டிவ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை மறக்க மாட்டார்கள். இப்போது, அவர்களுக்கு ரூ.200 கையில் இருந்தால் போதும், சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமல்லாமல், டேட்டா (Data) மற்றும் வாய்ஸ் கால்களை (Voice Calls) பெற்று கொள்ளலாம். இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 199 Prepaid Plan): அன்லிமிடெட் டேட்டா, தினசரி டேட்டா போன்ற அதிகப்படியான டேட்டா சலுகைகளை இந்த திட்டம் கொடுக்காது. மொத்தமாகவே 2 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்காது. ஏனென்றால், அவ்வளவு மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ரூ.199 செலவில் 28 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. இது கிடைத்தாலே அதில் வாய்ஸ் கால்களின் சலுகையும் இருக்கும். அதன்படி, இதிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
இந்த சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போக எஸ்எம்எஸ் சலுகையும், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்துக்கு டேட்டாவை போல மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டுவிடும். இதை தேவைக்களு ஏற்ப அனுப்பி கொள்ளலாம். முடிந்துவிட்டால், கட்டணம் இருக்கும்.
இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வருவோம், இந்த ஏர்டெல் திட்டத்துக்கும் மற்ற திட்டங்களை போலவே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) சலுகை கிடைக்கிறது. இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. அதேபோல ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
இந்த மொத்த சலுகைகளும் போக அண்மையில் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவும் கிடைக்கிறது. ஆனால், இந்த சந்தாவானது 12 மாதங்கள் வரையில் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளே இதில் கிடைக்கின்றன.
இதற்கு அடுத்து கூடுதல் டேட்டா வேண்டுமானால், ரூ.219 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதிலும் கிட்டத்தட்ட மொத்த சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால், டேட்டா மட்டும் கூடுதலாக கிடைக்கும். இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 219 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 219 Prepaid Plan): முந்தைய திட்டத்தில் பார்த்த சலுகைகள் இதிலும் கிடைக்கின்றன. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி அந்த நாட்கள் முழுவதுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கின்றன. இதுபோக 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த டேட்டாவும் மொத்த வேலிடிட்டிக்கும் பொருந்தும். இதற்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடையாது, கட்டணம் இருக்கும். மேலும், லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் 12 மாதங்கள் பயன்படுத்தும்படி கிடைக்கும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவும் இதில் கிடைக்கிறது. மினிமம் ரீசார்ஜ் வேண்டுமானால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








