ரூ.199 க்கு Airtel செய்த சம்பவம்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
டேட்டா அதிகமாக வேண்டாம், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் மலிவான விலைக்கு ரீசார்ஜ் இருந்தால், சொல்லுங்கள் என்று கேட்கும் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.250 விலைக்கு 2 திட்டங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், ஆரம்ப விலை திட்டங்களாகவும் இருக்கின்றன. ஆகவே, இதற்கு கம்மி விலைக்கு கிடைக்காது.
டெலிகாம் நிறுவனங்களில் தினசரி டேட்டா மற்றும் லம்ப்-சம் டேட்டா கொண்ட 2 வகையான திட்டங்கள் இருக்கின்றன. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா, 3 ஜிபி டேட்டா என்று கிடைக்கும் திட்டங்கள் தினசரி வகையில் வரும். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் தினசரி லிமிட்டில் டேட்டா கிடைக்கும். ஆனால், லம்ப்-சம் டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது.

ஏனென்றால், மொத்தமாகவே 2 ஜிபி, 3 ஜிபி என்று மட்டுமே கொடுக்கப்படும். இதை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது என்றால், அதை முதல் 2 நாட்களிலேயே பயன்படுத்திவிட்டால், அவ்வளவுதான் முடிந்துவிடும். மீண்டும் டேட்டா வேண்டுமானால், வவுச்சர்களுக்கு செல்ல வேண்டும்.
ஆனால், இந்த லம்ப்-சம் டேட்டா திட்டங்களானது, தினசரி டேட்டா திட்டங்களைவிட மலிவான விலைக்கே கிடைக்கும். இப்படி கிடைக்கும் லம்ப்-சம் டேட்டா திட்டங்களில் ரூ.199 திட்டம் மற்றும் ரூ.219 திட்டம் ஆகியவை அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் 28 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவை கொடுக்கும்.
ஏர்டெல் ரூ.199 திட்டத்தின் விவரங்கள்: இதில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நாட்களுக்கு மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும் என்று நினைக்க வேண்டும். 1 எம்பிக்கு 10 பைசா கட்டணம் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால், ஏர்டெல்லில் கிடைக்கும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், வாய்ஸ் கால்கள் அப்படி கிடையாது. 28 நாட்கள் முழுவதும் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கஸ்டமர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோக கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.
ஏர்டெல் சேஃப் நெட்வொர்க் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை ரியல் டைமில் டிடெக்ட் செய்து கொள்ளலாம். ப்ரீ ஹேலோ டியூன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவை கொடுத்துள்ளது. இந்த சந்தாவை ப்ரீ வெர்ஷனாக மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த திட்டத்தை பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.219 திட்டத்தின் விவரங்கள்: இந்த திட்டத்துக்கும் 28 நாட்களே வேலிடிட்டியாக இருக்கிறது. ஆனால், இதில் 1 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படவில்லை. மொத்தமாக 300 கொடுக்கப்பட்டுள்ளது.
டேட்டாவை போலவே இதுவும் வேலிடிட்டி முன்பாக முடிந்துவிட்டால், கட்டணம் செலுத்தி பெற வேண்டி இருக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. ப்ரீ ஹேலோ டியூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீ கன்டென்ட் மற்றும் ஸ்பேம் அலெர்ட் கிடைக்கிறது. கூடுதலாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications