Home
News

போட்டான் பாரு ஏர்டெல்.. ரூ.199 க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி.. 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்!

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் ரூ.199 மதிப்பிலான திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல்லில் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், ரூ.199 விலைக்கு கிடைக்கும் திட்டத்துக்கு செல்லலாம். ஆரம்ப விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த மலிவு விலை திட்டத்திலும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

போட்டான் பாரு ஏர்டெல்.. ரூ.199 க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ. 199 திட்டம் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Airtel Rs 199 Plan Adobe Express Premium): 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். மேலும், 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும்.

இது தினசரி டேட்டா சலுகை கிடையாது. 28 நாட்களுக்கும் கொடுக்கப்படும் டேட்டா சலுகையாக இருக்கிறது. ஆகவே, இதில் போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கிடைக்கிறது.

இதில் சோனிலிவ் (இலவச வெர்ஷன்) கிடைக்கும். மேலும், அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player) கிடைக்கிறது. விரோட் (Vrott), சன்னா ஜோர் (Channa Jor), ரன் டிவி (Runn TV) மற்றும் டிஸ்ட்ரோ டிவி (Distro TV) போன்ற ஓடிடி ஆப்களையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது.

ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கும். இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இந்த அலெர்ட் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக இப்போது அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் 12 மாதங்கள் வேலிடிட்டியுடன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டிக்கு மேல் பயன்படுத்தலாம்.

ரூ.4,000 மதிப்புள்ள இந்த சலுகையை ரூ.199 விலையில் இருந்து ஏர்டெல் நிறுவனம் கொடுத்துள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனத்தின் ரீசார்ஜ் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேபோல மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், இதே திட்டத்தில் முன்னதாக கொடுக்கப்பட்ட பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா நீக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆக இருக்கிறது. மேலும், 12 மாதங்களுக்கு சந்தாவை கொடுத்தது. இப்போது, இதை சத்தமில்லாமல் நீக்கிவிட்டு 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவை ஏர்டெல் நிறுவனம் சேர்த்துள்ளது. இருப்பினும், முன்னதாக ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு தொடர்ந்து பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா தொடர்ந்து கிடைக்கும்.

இருப்பினும், ரூ.199 விலைக்கு ஏகப்பட்ட சலுகைகள் கிடைப்பதால், இந்த திட்டம் வரவேற்பை பெறலாம். அதே நேரத்தில் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாகவும் இருப்பதால், சிம் ஆக்டிவுக்கும் இந்த ஏர்டெல் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுடன் திட்டம் கிடையாது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 199 Plan 12 Months Adobe Express Premium Validity Voice Data For 28 Days Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X