Home
News

ஏர்டெல் போட்ட போடு.. ரூ.195-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. 15ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள் இல்லை.. ஓடிடி சந்தா!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.195 விலை கொண்ட திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. பிரீமியம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கை கொடுக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. மேலும், 15 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். அதனுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 195 திட்டம் விவரங்கள் (Airtel Rs 195 Plan Details): இந்த திட்டமானது, டேட்டா சலுகை மற்றும் ஓடிடி சலுகை ஆகிவற்றை மட்டுமே கொடுக்கும். ஆகவே, இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும். அதேபோல இதில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படவில்லை. ஆகவே, கூடுதல் டேட்டாவுக்கு கட்டணம் இருக்கும்.

ஏர்டெல் போட்ட போடு! ரூ.195-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி.. 15ஜிபி டேட்டா!

இந்த டேட்டா திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 90 நாட்கள் வரையில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், 15 ஜிபி லம்ப்-சம் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படும். இதுபோக ப்ரீமியம் ஓடிடி பிரீமியம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கை கொடுக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது.

இதையும் 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஆக்டிவ் திட்டத்தை நீங்கள் வைத்திருந்தால், இந்த டேட்டா திட்டத்தின் சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்கு அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டி இருக்கும். இந்த சலுகைகளை மட்டுமே இந்த டேட்டா திட்டம் கொடுத்து இருக்கிறது.

ஒருவேளை டேட்டா மற்றும் ஓடிடி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் வேலிடிட்டி மட்டும் குறைவாக கிடைக்கும். இருப்பினும், டேட்டா சலுகை அதிகமாக இருக்கும்.

ஏர்டெல் ரூ 398 திட்டம் விவரங்கள் (Airtel Rs 398 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், அந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் கொடுக்கிறது. அதே நேரத்தில் முந்தைய திட்டத்தில் கிடைக்காத போஸ்ட் டேட்டா சலுகையானது, இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 28 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் ஓடிடி சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.

மேலும், பல்வேறு கூடுதல் சலுகைகளை இந்த திட்டம் பேக் செய்துள்ளது. ஆகவே, ஸ்பேம் கால்கள் அலெர்ட் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் போன்ற சலுகைகளை கொடுத்து இருக்கிறது. மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகையும் கொடுக்கிறது. இந்த பெர்ப்லெக்ஸிடியை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதன் மதிப்பு ரூ.17,000ஆக இருக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால், ஒட்டுமொத்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இந்த பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. டேட்டா மற்றும் ஓடிடிக்கு முதலாவது திட்டமும், வாய்ஸ் கால்களை கூடுதலாக பெற 2ஆவது திட்டம் நல்ல ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 195 Plan With 90 Days Validity 15GB Data JioHotstar Mobile Check Data Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X