Home
News

Airtel-க்கு கும்பிடு.. மறுபடியும் ரூ.185-க்கு ரீசார்ஜ்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள், 300எஸ்எம்எஸ்!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு 3 மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த வாய்ஸ் ஒன்லி திட்டங்களானது, இப்போது 1 மாதம் முதல் கிடைக்கின்றன. ஏனென்றால், ரூ.185 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய வாய்ஸ் ஒன்லி திட்டம் களமிறங்கி இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களாக (Voice Only Plan) ரூ.469 மற்றும் ரூ.1849 ரீசார்ஜ்கள் மட்டுமே கிடைத்தன. இந்த திட்டங்கள் முறையே 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்தன. இதனால், 28 நாட்கள், 30 நாட்கள் போன்ற வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பெற முடியாமல் போனது.

Airtel-க்கு கும்பிடு.. மறுபடியும் ரூ.185-க்கு ரீசார்ஜ்.. 28 நாட்கள்!

ஆகவே, இதுபோன்ற வேலிடிட்டியிலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை களமிறக்க டிராய் உத்தரவிட்டது. இப்போது, ஏர்டெல் நிறுவனம் ரூ.185 முதல் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சொல்லப்போனால், இதுவே மினிமம் ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது.

அதாவது, ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மினிமம் விலையில் சிம் ஆக்டிவ் கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தில் வழக்கம்போல டேட்டா கிடைக்காது. வாய்ஸ் கால்கள் (Voice Call), எஸ்எம்எஸ்கள் (SMS) மற்றும் ப்ரீ ஹேலோ டியூன்ஸ் மட்டுமே கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ.185 திட்ட விவரங்கள் (Airtel Rs 185 Plan Details): இந்த ப்ரீபெய்ட் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது.

300 எஸ்எம்எஸ்களை இந்த ஏர்டெல் ரூ.185 திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இதுதவிர ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. 300 எஸ்எம்எஸ்கள் முடிந்த பிறகு மீண்டும் எஸ்எம்எஸ் அனுப்பினால், லோக்கல் எஸ்எம்எஸ்க்கு ரூ.1 கட்டணம், எஸ்டிடி எஸ்எம்எஸ்க்கு ரூ.1.5 கட்டணம் இருக்கும்.

டேட்டா வேண்டாம், 28 நாட்களுக்கு சிம் ஆக்டிவாக இருந்தால் போதும் என்று கேட்கும் கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இன்றைய தேதியில் ஆரம்ப விலை சிம் ஆக்டிவ் திட்டமாக இந்த ரூ.185 திட்டம் இருக்கிறது. ஜியோவில் ரூ.189 விலைக்கு ஆரம்ப விலை திட்டம் கிடைக்கிறது.

ஆனால், இது வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடையாது 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ நிறுவனத்தின் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை பார்க்கையில், ஆரம்ப விலையே ரூ.448 விலைக்கு தொடங்குகிறது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கின்றன. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

1000 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப்களை அணுகலாம். சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுக்க வேண்டும். அக்டோபர் 21ஆம் தேதிக்குள் கொடுக்க டிராய் அவகாசம் கொடுத்துள்ளது. ஆகவே, அந்த தேதிக்குள் ஜியோவும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 185 Plan Unlimited Local STD Roaming Calls 28 Days Validity 300 SMS Check Voice Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X