Airtel SIM-க்கு மாதம் ரூ.155 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஹேலோ டியூன்ஸ்!
ஏர்டெல் சிம் கார்டு வைத்து இருப்பவர்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு தவிர்க்க முடியாத திட்டமாக ரூ.1849 திட்டம் இருக்கிறது. 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்தின் மாத செலவு ரூ.155ஆக மட்டுமே இருக்கிறது. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
மாதத்துக்கு ரூ.155 செலவில் கிடைக்கிறது என்றால், வெறும் ரூ.155 மட்டுமே செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாதத்துக்கு ஏற்படும் செலவு குறைவது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. அதன்படி இது லாபகரமான திட்டமாக இருக்கிறது. அதாவது, ஏர்டெல்லில் மாதம் முழுவதும் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், ரூ.199 திட்டத்துக்கு செல்ல வேண்டும்.
இதைவிட மலிவான திட்டம் கிடையாது. ஆனால், 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ரூ.1849 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, 1 மாதத்துக்கு ஏற்படும் செலவை கணக்கிட்டு பார்த்தால் ரூ.155 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு என்னென்ன சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.1849 திட்டம் கொடுக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் ஒன்லி திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Voice Only Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகையை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, லம்ப்-சம் டேட்டாவை கூட கொடுக்கப்படாது. தேவைப்பட்டால், டேட்டா வவுச்சரை பெற்று கொள்ளலாம். 365 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் (Unlimited Voice) கிடைக்கும்.
இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். தினசரிக்கு 100 என்னும் கணக்கில் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. 3600 எஸ்எம்எஸ்களை மொத்தமாக பெற்று கொள்ளலாம். இதை வேலிடிட்டி முழுக்க பயன்படுத்தி கொள்ளலாம். லிமிட் இல்லாமல், அனுப்பி கொள்ளலாம். தினசரி கணக்கு கிடையாது.
ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை பெற்று கொள்ளலாம். 30 நாட்களுக்கு ஒருமுறை புதிய ஹேலோ டியூனை மாற்றி கொள்ள முடியும். 12 மாதங்களுக்கு 12 டியூன்களை மாற்றி கொள்ளலாம். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவை இந்த ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் ஒன்லி திட்டம் கொடுத்துள்ளது. 12 மாதங்களுக்கு இதை பயன்படுத்த முடியும்.
இதே போல 365 நாட்கள் வேலிடிட்டியை மலிவான விலைக்கு டேட்டாவுடன் பெற்று கொள்ள வேண்டுமானால், ஏர்டெல் ரூ.2249 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆகவே, அதிக டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஓடிடி உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதில் டேட்டா சலுகை கூடுதலாக கிடைக்கிறது. 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம். மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கிறது. இதில் ப்ரீ கன்டென்ட்களை மட்டுமே பார்த்து கொள்ளலாம். இந்த திட்டங்கள் மட்டுமே மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டங்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications