Home
News

இனிமே மாசம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. வருடம் முழுசும் எஸ்எம்எஸ்!

புது மாசம் பொறந்துவிட்டது, இந்த மாதத்தில் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் மலிவான விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், மாசத்துக்கு ரூ.154 செலவில் கிடைக்கும் வருடாந்திட திட்டத்துக்கு (Yearly Plan) கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம். ஏனென்றால், இதைவிட மலிவான விலைக்கு ஏர்டெல்லில் திட்டம் கிடையாது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. முழு விவரங்களை பார்த்துவிட்டு ரீசார்ஜ் செய்வதை திட்டமிடுங்கள்.

இந்த ப்ரீபெய்ட் திட்டமானது டேட்டா சலுகைகளை கொடுக்காது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டமாக களமிறக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அடிமட்ட விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இருப்பினும், சிம் ஆக்டிவ் கிடைப்பதால், இதைவிட மலிவான விலைக்கு வருடம் முழுவதும் சலுகைகள் கிடைக்காது.

இனிமே மாசம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்!

ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Prepaid Plan): டேட்டா சலுகை வேண்டாம், வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் செய்ய வேண்டும், அதே நேரத்தில் இன்கம்மிங் கால்களும் வர வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு 365 நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

ஆகவே, வருடம் முழுவதும் இன்கம்மிங் கால்கள் மட்டுமல்லாமல், அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், குறையில்லாதபடி லம்ப்-சம் சலுகையில் கிடைக்கிறது.

அதாவது, 365 நாட்களுக்கும் 3600 எஸ்எம்எஸ்கள் என்னும் கணக்கில் வருகிறது. ஆகவே, மாதத்துக்கு 300 என்னும் கணக்கில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே முக்கிய சலுகைகளாக இருக்கின்றன. மற்ற சலுகைகளை பார்க்கையில், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மூன்று பிரத்யேக சலுகைகள் வருகின்றன.

ஆகவே, ஏர்டெல் ஸ்பேம் அலெர்ட் (Airtel Spam Alert) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகை மூலம் கூடுதல் கட்டணமில்லாமல், இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்கள் அலெர்ட் செய்யப்படும். அதேபோல கூடுதல் செலவு இல்லாமல், 3 மாத மெம்பர்ஷிப்புடன் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சலுகையை பெற்று கொள்ளலாம். ப்ரீஹலோடியூன்ஸ் வருகிறது.

மேற்கண்ட சலுகைகள் மட்டுமே போதும் என்றால், மாதத்துக்கு ரூ.154 செலவில் கிடைக்கும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் வழக்கம்போல கிடைக்கும் வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள். இந்த வருடாந்திர திட்டம் ரூ.3599 விலையில் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப சலுகைகளும் அதிகமாக கிடைக்கின்றன.

ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையுடன் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் முந்தைய திட்டத்தை போல வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan With Unlimited Voice Calls 365 Days Validity Check Voice SMS Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X