இனிமே மாசம் ரூ.158 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. ஆனால், ஏர்டெல்ல மாசம் ரூ.154 போதும்.. 1 வருட வேலிடிட்டி!
டிராய் (TRAI) என்று அழைக்கப்படுகிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டும் அடங்கிய திட்டங்களை கொடுக்க உத்தரவிட்டிருந்தது. இப்போது, ஜியோ மற்றும் ஏர்டெல்லில் அப்படியான திட்டங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இதில் ஜியோ மாதம் ரூ.158 செலவில் 336 நாட்களையும், ஏர்டெல் மாதம் ரூ.154 செலவில் 365 நாட்களையும் கொடுக்கிறது.
இப்போது, ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களில் யாருக்கு அடிமட்ட விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டும் அடங்கிய திட்டங்கள் கிடைக்கிறது? உண்மையில் இதுபோன்ற திட்டங்கள் அடிமட்ட விலையில் கிடைக்கிறதா? இதனால் யாருக்கு லாபம் உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வருடாந்திர வேலிடிட்டி கொடுத்தாலும், 336 நாட்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, 11 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) கால்கள் கிடைக்கிறது.
அதேபல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், லம்ப்-சம் சலுகையில் 3600 ஆக கிடைக்கிறது. இதுபோக ஜியோவில் அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) கிடைக்கிறது.
அதேபோல ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையும் இதில் இருக்கிறது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் மாதத்துக்கு ரூ.154 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இது ஜியோவைவிட கூடுதல் சலுகையாகும். அதே நேரத்தில் விலையும் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஆகவே, இரண்டும் ஒன்றுபோலத்தான் சலுகைகளை கொடுக்கின்றன.
ஏர்டெல் ரூ 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வருகிறது, இது ஜியோவைவிட கூடுதலாகும். ஆனால், விலையும் ரூ.101 அதிகமாக இருக்கிறது. இந்த திட்டத்திலும் ஜியோவை போலவே வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கின்றன.
ஆகவே, இந்த திட்டத்திலும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடிகிறது. அதேபோல 3600 எஸ்எம்எஸ்கள் ஆனது இந்த திட்டத்துக்கும் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, இதர சலுகைகளுக்கு வருவோம். இதில் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) இருக்கிறது.
இதற்கு 3 மாதங்கள் மெம்பர்ஷிப் கொடுக்கப்படும். இலவச ஹலோ ட்யூன்ஸ் (Free Hellotunes) வருகிறது. ஆனால், மாதத்துக்கு ஒரு ட்யூனை மட்டுமே வைத்து கொள்ள முடியும். ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அடங்கிய திட்டங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஒரே மாதிரியான சலுகைகளையே கஸ்டமர்களுக்கு கொடுக்கின்றன.
ஆனால், வேலிடிட்டிக்கு ஏற்ப ரூ.101 விலை மாறுபடுகிறது. ஆகவே மாத செலவை கணக்கிட்டால், ஜியோவில் ரூ.158 மற்றும் ஏர்டெல்லில் ரூ.154 மட்டுமே தேவைப்படுகிறது. இது மலிவான விலையாக இருக்கிறதா என்றால், உண்மைதான். ஆனால், வருடத்துக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருப்பதால், அதிக காசுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.
28 நாட்கள், 30 நாட்கள் போன்ற வேலிடிட்டியில் அதற்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்பட்டால் மட்டுமே இதை மலிவான விலை கொண்ட திட்டங்களாக கருத முடியும். பல மாதங்களுக்கு முன்கூட்டியே செலவு செய்து ரீசார்ஜ் செய்யும்படி இந்த திட்டங்கள் இருக்கின்றன. இதற்கு முன்பு டேட்டாவுடன் இருந்த திட்டங்களே கிட்டத்தட்ட இதே விலைக்குத்தான் இருந்தன.


Click it and Unblock the Notifications








