Home
News

ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்.. டேட்டா மட்டுமில்ல!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் கும்பிடு போடும்படியான அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை 365 நாட்கள் முழுவதும் கிடைக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.154 செலவில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைப்பதால், அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் (Airtel Yearly Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்களை களமிறக்கிய பிறகு இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் கிடைக்கும் வருடாந்திர திட்டமாக மாறியது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1849ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, மாத செலவு வெறும் ரூ.154ஆக மட்டுமே இருக்கிறது.

ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.154 போதும்.. 365 நாட்கள் சேவை!

இந்த விலைக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் 3600 எஸ்எம்எஸ்களை லம்ப்-சம் சலுகையாக பெறலாம். இதை 365 நாட்கள் முழுவதும் தேவைப்படும்போது அனுப்பி கொள்ளலாம். ஒருவேளை வேலிடிட்டிக்கு முன்னதாகவே 3600 எஸ்எம்எஸ்களையும் முடித்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் இருக்கும்.

ஆனால், வாய்ஸ் கால்கள் சலுகையில் அப்படி ஏதும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிட்டால், 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டும்தான் கிடைக்கிறதா? என்றால் அதுதான் இல்லை. கூடுதலாக 3 சலுகைகள் வருகிறது.

ஆகவே, அண்மையில் சேர்க்கப்பட்ட ஸ்பேம் வாய்ஸ் கால்கள் அலெர்ட் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. இந்த மெம்பர்ஷிப் 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதுபோக வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கிடைக்கிறது.

வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் இருந்தால் போதும் என்று கேட்கும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தை விட வேறு பெஸ்ட் திட்டம் கிடைக்காது. இருப்பினும், தினசரி டேட்டாவுடன் உங்களுக்கு வருடாந்திர திட்டம் தேவைப்பட்டால், ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் சரியான ஆப்ஷனாக இருக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதே 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகைகள் குறையாத அளவுக்கு கிடைக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இது 365 நாட்களுக்கும் கிடைப்பதால் உங்களுக்கு டேட்டாவில் குறையிருக்காது.

தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. தினசரி எஸ்எம்எஸ் (100 எஸ்எம்எஸ்) சலுகை இருக்கிறது. வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களாக கொடுக்கப்படுகிறது.

ஸ்பேம் அலெர்ட், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சலுகை கூடுதலாக கிடைக்கிறது. இந்த வருடாந்திர திட்டங்களில் உங்களுடைய தேவை மற்றும் சலுகைகளுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இரண்டு திட்டங்களும் விலைக்கு ஏற்பவே சலுகைகளை கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan With 365 Days Validity Unlimited Voice Calls Lumpsum SMS Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X