Home
News

Airtel-க்கு கும்பிடு.. ரூ.154-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. மாச செலவுல வாய்ஸ் கால்ஸ்.. உடனே ரீசார்ஜ் பண்ணுங்க!

2025ஆம் ஆண்டு முடிந்து, 2026ஆம் ஆண்டு வரப் போகிறது. இந்த நேரத்தில் ஏர்டெல் கஸ்டமர்கள் மாதத்துக்கு ரூ.154 செலவில் கிடைக்கும் வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்துவிடுங்கள். இந்த ஆண்டில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, இப்போதோ ரீசார்ஜ் செய்தால், 2026ஆம் ஆண்டில் டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தாலும் பயப்பட வேண்டியது கிடையாது.

ஏர்டெல் ரூ 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆனால், 365 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் சிம் ஆக்டிவ் கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

Airtel-க்கு கும்பிடு.. ரூ.154-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. மாச செலவு!

ஒரு மாதத்துக்கு ரூ.154 செலவு மட்டுமே கஸ்டமர்களுக்கு ஏற்படுகிறது. இந்த விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படும். ஆகவே, சிம் ஆக்டிவ் 12 மாதங்களுக்கும் கிடைக்கும்.

அதேபோல இன்கம்மிங் எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், மொத்தமாகவே 3600 கொடுக்கப்படும். இது 365 நாட்களுக்கும் கிடைக்கும் சலுகையாக இருக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு முன்பே 3600 எஸ்எம்எஸ்களை அனுப்பிவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் மட்டுமே திட்டத்துக்கான சலுகைகளாக இருக்கிறது. ஆனால், மேலும் 3 கூடுதல் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, ப்ரீ ஹலே டியூன்ஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் 30 நாட்களுக்கு ஒரு டியூன் என்று கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். ஏர்டெல்லில் ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு அலெர்ட் கிடைக்கும்.

இந்த சலுகையும் இதில் கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளும்படி பெர்ப்லெக்ஸிடி ப்ரோ சலுகையை இந்த வருடாந்திர திட்டம் கொடுக்கிறது. ஆகவே, இந்த 2025ஆம் ஆண்டில் வாய்ஸ் கால்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லாத மலிவு விலை திட்டமாக இது இருக்கிறது. டேட்டா தேவைப்பட்டால், மற்றொரு திட்டம் உள்ளது.

ஏர்டெல் ரூ 2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமும் மலிவு விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இருக்கிறது. ஆனால், இதில் டேட்டா சலுகை கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இருப்பினும், தினசரி டேட்டாவாக கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா சலுகையாக கொடுக்கப்படும். அதிலும் 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் கிட்டத்தட்ட வாய்ஸ் கால் திட்டம் போலவே இருக்கிறது. ஆனால், டேட்டா தேவைப்படும் கஸ்டமர்களுக்கு கொஞ்சமாக கொடுக்கிறது. மற்ற சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இதிலும் பெற்று கொள்ளலாம்.

இதில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் அடங்கும். மேலும், முந்தைய திட்டத்தில் பார்த்த 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. மேலும், ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ்கள் அலெர்ட் கிடைக்கிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ சலுகையும் ஒரு வருடத்துக்கு பயன்படுத்தும்படி இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan With 365 Days Validity Unlimited Voice Calls Airtel Cheapest Yearly Plan 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X