Airtel சூப்பர் தல.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3600 எஸ்எம்எஸ்.. அடிமட்ட ரேட்ல வருது!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ்கள் (SMS) சலுகைகளை மட்டுமே கொடுக்கும் திட்டங்களை இங்கே பார்க்கப் போகிறோம். இந்த ப்ரீபெய்ட் திட்டங்களானது (Prepaid Plans) 84 நாட்களுக்கான வேலிடிட்டியை கம்மியான விலைக்கு கொடுக்கிறது. இதேபோல வருடாந்திர வேலிடிட்டி (Yealry Validity) கொண்ட திட்டங்களும் இருக்கிறது. இந்த 3 திட்டங்களின் முழு சலுகைகளை பார்த்துவிட்டு உங்களுக்கான திட்டத்தை ஆப்ஷனில் எடுத்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): இந்த ஏர்டெல் திட்டமானது, வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans) அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கிடைக்க தொடங்கியது. இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் 2 சலுகைகள் வருகிறது.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் சலுகையில் 900 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கும். ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகை வருகிறது. அதேபோல ஹலேடியூன்ஸ் சலுகை வருகிறது.
இந்த சலுகைகளை மட்டுமே இதில் எதிர்பார்க்க முடியும். ஏனென்றால், 84 நாட்களுக்கான வேலிடிட்டியை மலிவாக கொடுக்கிறது. இதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே கொடுக்கும்படி வருடாந்திர வேலிடிட்டி திட்டமும் ஏர்டெல்லில் கிடைக்கிறது. இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் (Airtel Yearly Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 1849 திட்ட சலுகைகள் (Airtel Rs 1849 Plan Offers): முன்பே சொன்னதை போல இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் கம்மியான விலையிலேயே ஏர்டெல் சிம் கார்ட்டை ஆக்டிவாக (Airtel SIM Card Active) வைத்திருக்க முடியும். அதே நேரத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் 3600 லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது. அதேபோல ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ஹலே டியூன்ஸ் சலுகையும் கிடைக்கிறது. இதில் விலைக்கு ஏற்ப ஏர்டெல் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளாலம். இரண்டு திட்டங்களும் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன.
இதற்கு அடுத்து லம்ப்-சம் டேட்டாவுடன் மற்றொரு மலிவு விலை வருடாந்திர திட்டம் இருக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகையை போலவே டேட்டாவும் மொத்தமாக கொடுக்கப்படும். அதை வருடம் முழுவதும் தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன.
ஏர்டெல் ரூ 2249 திட்ட சலுகைகள் (Airtel Rs 2249 Plan Offers): இந்த திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த நாட்கள் முழுவதுக்கும் 30 ஜிபி டேட்டா லம்ப்-சம் டேட்டா கொடுக்கபடுகிறது. இது தினசரி டேட்டாவாக இல்லாததால், போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை இதில் எதிர்பார்க்க முடியவில்லை.
ஆகவே, 30 ஜிபிக்கு பிறகு கட்டணம் இருக்கும். மற்ற சலுகைகள் அப்படியே முந்தைய திட்டத்தில் கிடைத்தது மட்டுமே இருக்கிறது. அதாவது, 3600 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஹலே டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை வருகிறது. 84 நாட்கள் தொடங்கு 365 நாட்கள் வரையில் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








