Home
News

Airtel SIM-க்கு கும்பிடு.. மாதம் ரூ.200 கூட இல்ல.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ்!

ஏர்டெல் (Airtel) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் ஒன்லி பேக்குகள் (Voice Only Packs) மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.200 கூட செலவு வைக்காமல் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும்படி ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த வாய்ஸ் பேக் திட்டத்தின் (Voice Pack Plan) சலுகைகளை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் பேக் (Airtel Rs 1849 Voice Pack): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. கூடவே, எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகின்றன. ஆவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) இந்த ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் பேக் கொடுக்கிறது.

Airtel SIM-க்கு கும்பிடு.. மாதம் ரூ.200 கூட இல்ல.. 365 நாட்கள் சேவை!

மேலும், 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது பல்க் எஸ்எம்எஸ் சலுகையாக இருக்கிறது. ஆகவே, எந்த லிமிட்டும் கிடையாது. 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் எப்போது தேவைப்பட்டாலும் அனுப்பி கொள்ளலாம். 3600 எஸ்எம்எஸ்கள் முடிந்தால் மட்டுமே, கூடுதல் கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும்.

இந்த வேலிடிட்டி முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும். சொல்லப்போனால், அடிமட்ட விலைக்கு 365 நாட்கள் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இந்த ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் பேக் வாய்ஸ் பேக் இருக்கிறது. ஏனென்றால், மாதத்துக்கு வெறும் ரூ.155 மட்டுமே செலவாகிறது. ஆகவே, ரூ.200 விலைக்கும் குறைவாக சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் பேக் கொடுக்கிறது. மேலும், லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இறுதியாக அண்மையில் சேர்க்கப்பட்ட அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்படுகிறது.

இந்த சந்தாவை 12 மாதங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் பேக்கின் வேலிடிட்டி முடியும் வரையில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தை பெற்ற பிறகு டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். கூடுதலாக ஓடிடி வேண்டுமானால், ஓடிடி + டேட்டா ஒன்லி திட்டத்துக்கு செல்லலாம்.

அண்மையில் இதுபோன்ற ஒரு புதிய திட்டம் களமிறங்கி இருக்கிறது. ரூ.200 விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கிறது. யூடியூப் பிரீமியம் சந்தா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் கிடைக்கிறது. மேலும், ஜீ5 (ZEE5) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவையும் பெற்று கொள்ளலாம்.

இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவின் வழியாக சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் சோஷியல் ஸ்வாக் (Social Swag) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan With 365 Days Validity Unlimited Calls 3600 SMS Check Voice Pack Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X