ஒரே Airtel ரீசார்ஜ்.. அடுத்த 365 நாட்கள் முடிஞ்சு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. எஸ்எம்எஸ்கள்!
ஏர்டெல் (Airtel) சிம் கார்டை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு ஆண்டு முழுவதும் சிம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றால், அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத சில வருடாந்திர திட்டங்கள் (Annual Plans) இருக்கின்றன. இதில் ரூ.1849 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கஸ்டமர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.
இந்த ஏர்டெல் ரூ.1849 திட்டத்தின் (Airtel Rs 1849 Plan) சிறப்பம்சமே இதில் கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி (365 Days Validity) ஆகும். அதாவது, ஒருமுறை ரூ.1849-க்கு ரீசார்ஜ் செய்தால் அடுத்த 365 நாட்களுக்கு சிம் ஆக்டிவாக இருக்கும். இதனால் ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது மொபைல் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெல் ரூ.1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Calls) வழங்கப்படுகின்றன. எனவே, இந்தியாவுக்குள் உள்ள மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கு தொடர்ந்து வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும். இதற்கு அடுத்ததாக, இந்த வருடாந்திர திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள் (SMS) கிடைக்கின்றன.
365 நாட்கள் வேலிடிட்டி என்பதால், ஒரு வருட காலத்துக்கு தேவையான அடிப்படை எஸ்எம்எஸ் வசதியையும் இந்த திட்டம் வழங்குகிறது. மேலும், இலவச ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன. அதேபோல், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவும் திட்டத்தின் கூடுதல் நன்மையாக வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த ரூ.1849 திட்டத்தில் தினசரி மொபைல் டேட்டா (Daily Data) சலுகை கிடையாது. அதாவது, தினசரி 1 ஜிபி, 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களைப் போல இதை பயன்படுத்த முடியாது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இதில் இல்லை. எனவே, மொபைல் டேட்டா பயன்பாடு குறைவாக இருந்து, முக்கியமாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் சிம் ஆக்டிவாக இருப்பது மட்டுமே தேவையாக இருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் சலுகைகள் பொருந்தும்.
ஒருவேளை ஆண்டு முழுவதும் தினசரி டேட்டாவும் தேவைப்பட்டால், ஏர்டெல் ரூ.3599 வருடாந்திர திட்டத்தை பார்க்கலாம். இதில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மொத்தத்தில், ஒரு வருடத்துக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் வசதியை ஒரே ரீசார்ஜ் மூலம் பெற விரும்பும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு ரூ.1849 திட்டம் ஒரு வருடாந்திர வாய்ஸ் ஒன்லி (Voice Only) திட்டமாக உள்ளது. இதில் கூடுதல் டேட்டா வேண்டும் என்றால் மலிவான விலைக்கு கிடைக்கும் டேட்டா வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
