Airtel-க்கு அடிடா சல்யூட்.. மாசத்துக்கு ரூ.155 குடுங்க.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ், ஸ்பேம் அலெர்ட், ஹலே டியூன்ஸ் மற்றும் பெர்ப்லெக்ஸிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் மாதத்துக்கு ரூ.155 செலவில் கிடைக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் மலிவான வருடாந்திர திட்டமாகவும் (Cheapest Yearly Plan) இது இருக்கிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Prepaid Plan): இந்த ஏர்டெல் திட்டத்தில் டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், கூடுதல் சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கொடுக்கப்படும். அதேபோல வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கும்.

இதைவிட மலிவான வருடாந்திர திட்டம் (Yearly Plan) ஏர்டெல்லில் கிடையாது. ஆகவே, இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை (Voice Only Plan) பெறும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கால்களின் சலுகைகள் கிடைக்கும்.
மற்ற நிறுவனங்களை போல 336 நாட்கள், 330 நாட்கள் என்று சில நாட்களுக்கு வேலிடிட்டி கம்மியாக கிடைக்காது. முழு வருடாந்திர கணக்கில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வாய்ஸ் கால்களுக்கு அடுத்து முக்கியமாக இருக்கும் எஸ்எம்எஸ் சலுகையானது, லம்ப்-சம் (Lump-sum) முறையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, வழக்கமாக கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், இதில் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கஸ்டமர்களின் கணக்குக்கு ஒதுக்கப்படும். இதை தேவைப்பட்டால் அதிகமாகவும், இல்லையென்றால் குறைவாகவும் அனுப்பி கொள்ள வேண்டும்.
ஏனென்றால், 365 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே எஸ்எம்எஸ்களை முடித்துவிட்டால், அதன்பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள வேண்டி இருக்கும். இந்த சலுகைகள் போக மூன்று கூடுதல் சலுகைககளையும் இந்த வாய்ஸ் ஒன்லி திட்டம் கொடுக்கிறது. ஆகவே, வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் உள்ளது.
இந்த ஹலோ டியூனை (Hello Tune) 30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ள முடியும். ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் இன்கம்மிங் வாய்ஸ் மற்றும் இன்கம்மிங் எஸ்எம்எஸ் ஆகியவற்றில் ஸ்பேம்களை தெரிந்து கொள்ள லைவ் அலெர்ட் (Live Alert) இதில் கிடைக்கிறது. கூடுதல் செலவில்லாமல், இந்த சலுகைகளை கஸ்டமர்கள் பெறலாம்.
மேலும், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த சந்தாவும் வருடம் முழுவதும் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை போலவே இந்த பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவையும் வருடம் முழுவதும் ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இது வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருந்தாலும், மலிவான விலைக்கு வருடம் முழுவதும் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கிறது. அதாவது, இந்த திட்டத்தின் விலை ரூ.1849ஆக இருந்தாலும், 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு தேவைப்படும் தொகையை கணக்கிட்டால், ரூ.155 மட்டுமே செலவாக இருக்கிறது.
இந்த ரூ.155 விலைக்கு மாதாதந்திர திட்டத்தை தேடினால், ஏர்டெல்லில் கிடைக்காது. ஆனால், வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் அந்த விலைக்கு சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது. இதேபோல லம்ப்-டேட்டாவுடன் வருடாந்திர திட்டம், தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் ஏர்டெல்லில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








