Home
News

Airtel.. இதை செய்யலனா.. மாதாந்திரம் ரூ.154 இல்ல.. ரூ.187 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் (Airtel) நிறுவனம் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை நீக்கி வருகிறது. வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலிவு விலை திட்டமான ரூ.189 ரீசார்ஜை நீக்கிவிட்டது. இதனால், அடுத்து இருக்கும் மலிவு ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்க அல்லது சலுகைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இப்போதே மாதத்துக்கு ரூ.154 மற்றும் ரூ.187 விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்வது நல்லதாக இருக்கும்.

ஏர்டெல் ரூ 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், ரூ.154 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. இது மலிவு விலை வருடாந்திர திட்டமாக இருக்கிறது.

Airtel.. இதை செய்யலனா.. மாதம் ரூ.154 இல்ல.. ரூ.187 போதும்.. 365 நாள்!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இதில் தினசரிக்கு எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. 3600 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக உங்களுக்கு நம்பருக்கு கொடுக்கப்படும். இதை தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற கணக்கும் இதற்கு கிடையாது. இந்த சலுகைகளுக்கு அடுத்து ஸ்பேம் அலெர்ட் (SPAM Alert) சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் இன்கம்மிங் கால்களிலும், எஸ்எம்எஸ்களிலும் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ளலாம். ப்ரீ ஹலோ டியூன்ஸ் கிடைக்கிறது.

இதை 30 நாட்களுக்கு ஒரு மட்டுமே மாற்றி கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக லேட்டஸ்ட்டாக சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவானது, 12 மாதங்களுக்கு கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே இந்த வருடாந்திர திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டேட்டா மட்டும் கிடைக்காது. பின்வரும் திட்டம் அதற்கு சரியாகும்.

ஏர்டெல் ரூ 2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் அப்படியே இதற்கும் கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை மட்டும் கூடுதலாக கொடுக்கப்படும். ஆனால், இது தினசரி டேட்டா சலுகை கிடையாது. லம்ப்-சம் டேட்டா சலுகையாகும். ஆகவே, மொத்தமாக டேட்டா கொடுக்கப்பட்டுவிடும், அது முடிந்துவிட்டால், கட்டணம் இருக்கும்.

ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் அதாவது 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இதற்கு தேவைப்படும் மாத தொகையை பார்த்தால் ரூ.187 மட்டுமே இருக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கொடுக்கப்படுகிறது. 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

அதேபோல ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை உள்ளது. மேலும், 12 மாதங்களுக்கு பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. டேட்டா சலுகையை பார்க்கையில், 365 நாட்களுக்கும் 30 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த டேட்டாவை வேலிடிட்டிக்கு முன்பே முடித்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் இருக்கும்.

இல்லையென்றால், டேட்டா இல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டங்கள் மட்டுமே மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டங்களாக இருக்கின்றன. முன்னதாக ரூ.189 விலை கொண்ட திட்டம் நீக்கப்பட்டதால், அடுத்து இருக்கும் திட்டங்களிலும் ஏதும் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan Rs 2249 Plan 365 Days Validity Unlimited Voice Calls Check Airtel Yearly Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X