Airtel-க்கு கும்பிடு.. ரூ.155 மாத செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. சீப்பான விலைக்கு ரீசார்ஜ்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் மலிவு விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டத்தில் (Cheapest Yearly Plan) மாதத்துக்கு வெறும் ரூ.155 செலவில் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. வருடம் முழுவதுக்குமான சலுகைகளை அடிமட்ட விலைக்கு பெற வேண்டுமானால், இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதுகுறித்த விவரங்கள் இதோ.
மாதத்துக்கு ரூ.155 செலவில் கிடைக்கிறது என்றால், அந்த தொகை இருந்தால் போதும் ரீசார்ஜ் செய்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். மாதத்துக்கு ரீசார்ஜ் செய்தவதைவிட வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கிறது. அதாவது, ஏர்டெல்லில் 1 மாத வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கொண்ட திட்டம் ரூ.199-க்கு கிடைக்கிறது.

இதைவிட மலிவான விலைக்கு திட்டங்கள் கிடையாது. ஆனால், ஏர்டெல் ரூ 1849 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த தொகையை மாதத்துக்கு கணக்கிட்டு பார்த்தால், வெறும் ரூ.154.8 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் ரூ.155 விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 1849 திட்ட சலுகை விவரங்கள் (Airtel Rs 1849 Plan Offers Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டமாக (Voice Only Plan) களமிறங்கியது. இருப்பினும், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் சில கூடுதல் சலுகைகளையும் இதில் வருகிறது.
முதலில் வாய்ஸ் கால்களை பார்ப்போம். இந்த திட்டத்துக்கு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) கிடையாது. இதுவே ஒரு சிம் ஆக்டிவ் திட்டமாக (SIM Active Plan) கிடைக்கிறது. ஆகவே, 365 நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கால்களின் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் பொருந்தாது. இருப்பினும், மொத்தமாக எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதை தேவைப்படும்போது, கூடுதலாகவும் அல்லது குறைவாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். 3,600 எஸ்எம்எஸ்களை இப்படி அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. 2 கூடுதல் சலுகைகள் வருகின்றன.
ஆகவே, மற்ற வருடாந்திர திட்டத்தில் மாதத்துக்கு ஒரு ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கும். அதேபோல இந்த வாய்ஸ் ஒன்லி வருடாந்திர திட்டத்துக்கும் கிடைக்கிறது. அதேபோல ஸ்பேம் வாய்ஸ் கால்கள் அல்லது ஸ்பேம் எஸ்எம்எஸ்களை தெரிந்து கொள்ளவதற்காக லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. விலைக்கு ஏற்றது.
இதே சலுகைகளை மாதத்துக்கு மட்டுமே பெற வேண்டுமானால், ஏர்டெல் கஸ்டமர்கள் ரூ.199 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம். இந்த திட்டத்தில் கூடுதலாக லம்ப்-சம் டேட்டா கிடைக்கும். ஆனால், அதுவும் குறைவாகவே இருக்கும். ஆகவே, இந்த மாதாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா மொத்தமாகவே 2 ஜிபிதான். ஒரு நாளுக்கு கிடையாது. மற்ற சலுகைகளை பார்த்தால், முந்தைய திட்டத்தில் கிடைத்த லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கும். கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகையும் பிரீமியம் அல்லாத கன்டென்ட்களுடன் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








