Airtel-க்கு பெருசா ஒரு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.155-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ஒரு ப்ரீபெய்டு திட்டத்தில் மாதத்திற்கு வெறும் ரூ.155 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இதுபோக எஸ்எம்எஸ் மற்றும் ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகையும் கிடைக்கிறது. இவ்வளவு மலிவு விலை கொண்ட இந்த வருடாந்திர ப்ரீபெய்டு திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த திட்டம் வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருக்கிறது. ஆனால், எஸ்எம்எஸ் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ போன்ற கூடுதல் சலுகைகளையும் கொடுக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டியில் அடிமட்ட விலை கொண்ட திட்டமாக இது இருக்கிறது.

ஆகவே, இதைவிட மலிவான விலைக்கு ஏர்டெல் நிறுவனத்தில் வருடாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடையாது. இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.155 மட்டுமே செலவாக இருக்கிறது. அதாவது, 12 மாதங்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதில் ஒரு மாதத்திற்கு ரூ.155 மட்டுமே தேவைப்படுகிறது. இது மலிவு விலையாகும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 365 நாட்கள் முழுவதும் உங்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. ஆகவே, உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் கிடைத்து விடுகிறது. இதுபோக எஸ்எம்எஸ் சலுகையும் இருக்கிறது. ஆனால், அது தினசரிக்கு உங்களுக்கு கிடைக்காது. மொத்தமாக கொடுக்கப்படும்.
3600 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கிடைப்பதால், இதை உங்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே, தினசரி லிமிட் இதற்கு பொருந்தாது. உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவைப்படுகிறது அவ்வளவு எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளலாம். 365 நாட்களுக்குள் 3600 எஸ்எம்எஸ்களையும் பயன்படுத்தி விட்டால் அதன் பிறகு கட்டணங்கள் இருக்கும்.
இந்த 2 சலுகைகளும் மட்டுமே முக்கியமான சலுகைகளாக இருக்கின்றன. இதுபோக மூன்று சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. வழக்கமான ஃப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை இருக்கிறது. மாதத்துக்கு ஒரு டியூன் என்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ஸ்பேம் பில்டர்கள் கிடைக்கின்றன. இதற்காக கூடுதல் கட்டணம் கிடையாது.
ஆகவே, உங்களுக்கு வரும் ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் ஸ்பேம் வாய்ஸ் கால்களை முன்கூட்டியே டிடெக்ட் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து கொடுக்கப்பட்டன. இப்போது, கூடுதலாக ஒரு மிகப்பெரிய சலுகை சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு ஏஐ சாட் பாட் சலுகை ஆகும். அதாவது பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது.
இந்த திட்டத்திற்கு கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி போலவே இந்த ஏஐ சந்தாவுக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, திட்டம் இருக்கும் வரை இந்த ஏஐ சந்தாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த வருடாந்திர திட்டம் கொடுக்கிறது. சிம் ஆக்டிவ் மட்டுமே போதுமானால் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு லம்ப்-சம் டேட்டா தேவைப்பட்டால், ஏர்டெல் ரூ.2,249 திட்டத்தை (Airtek Rs 2,249 Plan) திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதிலும் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. அதேபோல 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








