Home
News

Airtel SIM வச்சிருக்கீங்களா.. மாதம் ரூ.155-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3600 எஸ்எம்எஸ்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டை வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 2 வருடாந்திர திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. இப்போது, ரூ.1849 முதல் வருடாந்திர திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் வாய்ஸ் ஒன்லி திட்டம் மற்றும் மொத்த டேட்டா திட்டம் ஆகிவற்றை பார்க்கலாம்.

தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் வேண்டுமானால், ரூ.3,599 திட்டமே ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. ஆனால், ஏர்டெல் ரூ.1849 திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ.2249 திட்டம் ஆகியவறை அதைவிட கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கின்றன. இதற்கு ஏற்ப சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.

Airtel SIM வச்சிருக்கீங்களா.. மாதம் ரூ.155க்கு 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Prepaid Plan): ஏர்டெல்லின் ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாக இந்த ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கிறது. இதில் டேட்டா சலுகைகள் கொடுக்கப்படாது. வாய்ஸ் ஒன்லி திட்டமாகவே பயன்படுத்த முடியும்.

ஒருவேளை டேட்டா தேவைப்பட்டால், ஏர்டெல் கஸ்டமர்கள் டேட்டா வவுச்சர்களை பெற்று கொள்ளலாம். இந்த ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன.

1 ஜிபி டேட்டா கூட கிடைக்காது. அதேபோல எஸ்எம்எஸ்களும் நாளொன்றுக்கு அனுப்பி கொள்ளும்பபடி கிடைக்காது. 3600 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்பட்டுவிடும். 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் தேவைப்படும் போது, இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். ஆனால், வேலிட்டிக்கு முன்பாக முடித்துவிட்டால், கட்டணம் இருக்கும்.

இந்த ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் சலுகைகளை பார்க்கையில், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா 12 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது. இதை வழக்கம்போல 30 நாட்களுக்கு ஒரு மாற்றி கொள்ளலாம். 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 12 டியூன்களை மட்டுமே மாற்ற முடியும்.

இதேபோல மலிவான வருடாந்திர திட்டத்தில் டேட்டா தேவைப்படும் கஸ்டமர்கள் ஏர்டெல் ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். டேட்டா என்றவுடன் தினசரிக்கு டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா என்று எண்ண வேண்டாம். முந்தைய திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கிடைத்ததை போலவே இதில் டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2249 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ப்ரீ ஹெலோ டியூன்ஸ், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். ஆனால், கூடுதலாக டேட்டா கொடுக்கப்படும்.

ஆகவே, இந்த திட்டத்தில் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls), 3600 எஸ்எம்எஸ்கள், 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கும். ப்ரீ ஹேலோடியூன்ஸ் சந்தாவும் கிடைக்கும். இதுபோக 30 ஜிபி டேட்டாவை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan 365 Days And Rs 2249 Plan 365 Days Validity Check One Year Plans Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X