ரூ.181-க்கு முடிச்ச ஏர்டெல்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 15 ஜிபி டேட்டா.. வாய்ஸ் மட்டும் இல்ல.. 22+ ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு மலிவான விலையில் லம்ப்-சம் டேட்டா, அதிக ஓடிடி ஆப்கள் மற்றும் பக்காவான வேலிடிட்டி வேண்டுமானால், அவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஏர்டெல் ரூ.181 திட்டம் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், இதில் 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த டேட்டா மற்றும் ஓடிடி திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 181 திட்ட விவரங்கள் (Airtel Rs 181 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, டேட்டா திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த டேட்டா திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 30 நாட்களுக்கும் மொத்தமாகவே 15 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு போஸ்ட் டேட்டா கிடைக்காது.

ஆகவே, கட்டணங்கள் இருக்கும். ஆனால், ஓடிடி சலுகையில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த ஓரே ஆப்பின் கீழ் 22+ ஓடிடி ஆப்களின் சந்தா பயன்படுத்த கிடைக்கின்றன.
இதில் சோனி லிவ் (Sony Liv), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal), சன்நெக்ஸ்ட் (SunNxt) உள்ளிட்ட ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப்பை டவுன்லோட் செய்து, உங்களது ஏர்டெல் நம்பரை லாகின் செய்தால் போதும் மொத்த ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ஆப்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஒருவேளை ஜியோஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா டேட்டா திட்டத்தில் வேண்டுமானால், வேறு ஆப்ஷன்கள் ஏர்டெல் நிறுவனத்தில் கிடைக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு ரூ.195 விலை கொண்ட திட்டம் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 195 திட்ட விவரங்கள் (Airtel Rs 195 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 12 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை 30 நாட்களுக்கு ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த சந்தா போக முந்தைய திட்டத்தில் பார்த்த, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவும் இந்த திட்டத்தில் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, சோனி லிவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சாவ்பால், சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட ஆப்களின் சந்தாவும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்காது.
இந்த 2 திட்டங்களில் கிடைத்த ஓடிடி ஆப்களைவிட அதிகப்படியான ஓடிடி மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா வேண்டுமானால், மற்றொரு பக்காவான திட்டம் இருக்கிறது. இதில் அமேசான் பிரைம் தவிற மற்ற பிரீமியம் ஓடிடிகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவின் கீழ் 25+ ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
ஏர்டெல் ரூ 279 திட்ட விவரங்கள் (Airtel Rs 279 Plan Details): இந்த திட்டத்துக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆனால், மாதாந்திர வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தில் பார்த்தால், எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் இதிலும் கிடைக்கிறது. ஆனால், 25+ ஓடிடிகள் இதில் பயன்படுத்த கிடைக்கின்றன.
இதுபோக நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) சந்தா கிடைக்கிறது. ஜீ5 பிரீமியம் (ZEE 5 Premium) சந்தா கிடைக்கிறது. ஆகவே, அதிகப்படியான ஓடிடி ஆப்களை இதில் பயன்படுத்தலாம். அதேபோல பேசிக், சூப்பர் போன்ற பிரீமியம் சலுகைகளையும் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








