Home
News

கேபிள் டிவி எதுக்கு? இனி ரூ.181-க்கு கொடுங்க போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 22 ஓடிடி ஆப்.. Airtel-க்கு குஷி!

டிடிஎச், ஓடிடி இருந்தா போதுமே, கேபிள் டிவி எதுக்குனு கேட்குற காலத்துக்கு வந்துட்டோம். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் அதுக்கு ஏற்றபடி அடிமட்ட விலைக்கு ஓடிடி மற்றும் டிடிஎச் திட்டங்களை கொடுக்க தொடங்கிவிட்டன. இப்போது, ஏர்டெல் நிறுவனம் நினைத்து பார்க்க முடியாத அடிமட்ட விலைக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் திட்டத்தை (Airtel Xstream Play Premium Plan) களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் திட்டமானது, ஓடிடி ஆப்களின் சலுகையை வாரி வழங்கி இருக்கிறது. அதேபோல லைவ் டிவி சேனல்களுக்கான டிடிஎச் திட்டமும் ஏர்டெல்லிடம் இருக்கிறது. முதலில் இந்த பிரீமியம் ஓடிடி திட்டத்தில் கிடைக்கும் டேட்டா சலுகைகள், வேலிடிட்டி மற்றும் 22 ஓடிடி ஆப்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

கேபிள் டிவி எதுக்கு? இனி ரூ.181-க்கு கொடுங்க போதும்.. 30 நாட்கள் சேவை!

ஏர்டெல் ரூ 181 திட்ட விவரங்கள் (Airtel Rs 181 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் 15 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 22+ ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தலாம். இந்த ஓடிடி மற்றும் டேட்டாவுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, மாதம் முழுவதும் ஓடிடி பிரியர்கள் எந்தவித குறையும் இல்லாமல், பல்வேறு ஓடிடிகளை பார்க்கலாம்.

எந்தெந்த ஓடிடி ஆப்கள் கிடைக்கும்? சன்நெக்ஸ்ட் (Sun NXT), சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் மனோரமா மேக்ஸ் (Manorama Max) போன்ற முன்னணி ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், டாலிவுட்பிளே (Dollywood Play), ஈராஸ் நவ் (Eros Now), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix),ஹோய்சோய் (HoiChoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) ஆப்களும் வருகின்றன.

மேலும், எபிக் ஆன் (Epic On), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), அல்ட்ரா (Ultra), கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), சாவ்பால் (Chaupal), ஃபேன் கோட் (Fan Code), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), அல்ட்ரா (Ultra) மற்றும் ஷீமாரூமீ (Shemaroome) ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் இலவச சேனல்களும் அடங்கும். ஆகவே, அடிமட்ட விலையில் பொழுதுபோக்குக்கு எந்த வித குறையும் இல்லாத ஓடிடி திட்டம் வேண்டுமானால், இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கொண்ட திட்டத்தை பெற்று கொள்ளுங்கள். ஒருவேளை டிடிஎச் சலுகையுடன் பிராட்பேண்ட் டேட்டாவும் வேண்டுமானால், ரூ.599-க்கு கிடைக்கும் திட்டம் தேர்வாகும்.

இந்த திட்டத்தில் பிராட்பேண்ட் டேட்டாவுடன் ஓடிடி மற்றும் டிடிஎச் மூலம் டிவி சேனல்களின் சலுகை எதிர்பார்க்கலாம். ஆகவே, 40 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த டேட்டா சலுகை போக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) ஆப் சந்தா கொடுக்கப்படும்.

இந்த ஓடிடி மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் கிடைக்கும் 22-க்கும் மேற்பட்ட ஆப்களையும் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, ஓடிடி ஆப்கள் மற்றும் அதற்கு தேவைப்படும் டேட்டாவில் எந்தவித குறையும் இந்த திட்டத்தில் கிடையாது. இப்போது முக்கிய சலுகைக்கு வருவோம். மேற்கண்ட சலுகைகள் போக டிவி சேனல்கள் கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கிறது. இதில் எச்டி சேனல்களும் அடங்கும். உங்களது விருப்பத்துக்கு ஏற்ப டிவி சேனல்களை தேர்வு செய்து அதை பெற்று கொள்ளலாம். அதற்கான கட்டணம் இந்த திட்டத்தில் இருக்கும். இப்படி கேபிள் டிவியில் கிடைக்கும் சலுகைகளுக்கு மேலாக இந்த திட்டங்கள் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 181 Plan With 22 OTT App 15GB Data 30 Days Validity Check Xstream Play Premium Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X