ஒரே திட்டம்.. லைஃப் டைம் செட்டில்மென்ட்.. Airtel பக்கம் எல்லோரும் திரும்பிட்டாங்க.. நீங்க இன்னும் கவனிக்கலையா?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஜியோ (Jio) உடன் நடக்கும் கடுமையான டெலிகாம் போட்டியை முறியடிக்க, பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணமாக இருக்கிறது. இப்போது நிறுவனம் மூன்று 1 வருட லைஃப் டைம் செட்டில்மென்ட் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களை கவர்வதை மட்டும் குறிக்கோளாக வைத்து இயங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களை ஈர்க்கும் திட்டங்களை வழங்குவதோடு, மற்ற டெலிகாம் ஆபரேட்டர் பயனர்களை தன் வசம் ஈர்க்க முயற்சிக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

அப்படி, ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மூன்று 1 வருட வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இவை மூன்று விலை புள்ளிகளில் வெவ்வேறு நன்மைகளை வழங்கும் திட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றிய விபரங்கள் இதோ.
1. ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1799 Recharge Plan):
இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்திட்டம் வெறும் 24ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும். ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் வழக்கம் போல அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 3600 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகையாகும். வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் இதன் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இ வருட செல்லுபடியாகும் திட்டத்துடன் கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகிறது. இதில் Airtel Thanks நன்மைகளாக அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) போன்ற இலவச நன்மைகளும் பயன்படுத்த கிடைக்கின்றது. ஒரு வருடம் முழுக்க வாய்ஸ் கால்ஸ் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது சூப்பர் திட்டம். கூடுதல் டேட்டா தேவைக்கு டேட்டா பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்தலாம்.

2. ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2999 Recharge Plan):
இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மைகளை பெறுவீர்கள். ஆனால், இத்துடன் எந்தவொரு இலவச ஓடிடி நன்மைகளும் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் மேலே கூறிய ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் இதில் கிடைக்கும்.
3. ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3359 Recharge Plan):
இந்த திட்டம் தான் 1 வருட லைஃப் டைம் செட்டில்மென்ட்டை வழங்கி அசத்தியுள்ளது. இத்திட்டம், தினசரி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகை போன்ற நன்மைகளை 365 நாட்களுக்கு தடையில்லாமல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இதுதவிர இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் ஒரு வருடத்துக்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் (Disney+ Hotstar Subscription) கிடைக்கிறது. அதேபோல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மைகளும் இத்துடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








