ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதத்துக்கு ரூ.149 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ வாடிக்கையாளர்களே மிரளும்படி மாதத்துக்கு வெறும் ரூ.149 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 24 ஜிபி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் ஏர்டெல் (Airtel) நிறுவனம் வழங்குகிறது. இத்திட்டம் குறித்த விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 1799 திட்ட விவரங்கள் (Airtel Rs 1799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதால், தினசரி டேட்டா வழங்கப்படவில்லை.

இருப்பினும், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகையாகும். ஆகவே, வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதோடு ஃபாஸ்ட்டேக் (FASTag) கட்டணத்தில் ரூ.100 கேஷ்பேக் சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் அப்பல்லோ 24|7 சர்க்கிள் ஆப்பை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு ஒரு எஸ்எம்எஸ்க்கு ரூ.1.5 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல இந்த திட்டத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகை கிடையாது.
ஆகவே, 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. டேட்டா சலுகையை விரும்பாமல், வருடம் முழுவதும் வாய்ஸ் கால் சலுகை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இதே சலுகையுடன் தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ 2999 விலையில் கிடைக்கும் மற்றொரு திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

ஏர்டெல் ரூ 2999 திட்ட விவரங்கள் (Airtel Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக அன்லிமிடெட் 5 டேட்டா (Unlimited 5G Data) மற்றும் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
ஆகவே, மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடியும். முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல அப்பல்லோ 24|7 சர்க்கிள், ப்ரீ-ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். இது ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டத்தின் தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. முந்தய திட்டத்தின் மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.149 மட்டுமே தேவைப்படுகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் டேட்டா சலுகை தேவைப்படாத நபர்களுக்கு இந்த ஒரு வருட திட்டம் மட்டுமே மிகுந்த வாய்ஸ் கால் சலுகைகள் கொண்ட திட்டமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








