ஏர்டெல்லுக்கு விருந்து.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24GB டேட்டா!
ஜியோவே மிரளும்படி ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களில் முதல் திட்டமானது, மாதத்துக்கு வெறும் ரூ.149 செலவில் கிடைக்கிறது. மொத்தமாக மூன்று ஒரு வருட திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் முழு விவரங்கள் இதோ.
ஏர்டெல் ரூ 1799 திட்ட விவரங்கள் (Airtel Rs 1799 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடையாது. இருப்பினும், லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்த முடியும். மற்ற சலுகைகள் அனைத்தும் தினசரிக்கு கிடைக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். மேலும் அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றின் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ 2999 திட்ட விவரங்கள் (Airtel Rs 2999 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படுகிறது.
முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இதிலும் கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24|7 சர்க்கிள், ப்ரீ-ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகள் கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களையும் விட அதிக டேட்டா சலுகை மற்றும் ஓடிடி சலுகையேடு மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஓடிடி மற்றும் டேட்டா பிரியர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும்.
ஏர்டெல் ரூ 3359 திட்ட விவரங்கள் (Airtel Rs 3359 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 912 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ள முடியும். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும், முந்தை திட்டங்களை போலவே அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. முதல் திட்டத்துக்கு மாதம் ரூ.149 செலவாகிறது. அதேபோல 2ஆவது திட்டத்துக்கு ரூ.249 மற்றும் 3ஆவது திட்டத்துக்கு ரூ.279 செலவாகிறது. வாய்ஸ் காலுக்கு முதல் திட்டத்தையும், டேட்டாவுக்கு 2ஆவது திட்டத்தையும், டேட்டாவோடு ஓடிடிக்கு 3ஆவது திட்டத்தையும் தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications