Airtel சிம் இருக்கா.. ஒரே பிளான் ஓஹோனு நன்மை.. ப்ரீபெய்ட், போஸ்ட்பைடு பயனர்களுக்கு ட்ரீட்.. எந்த திட்டம்?
ஏர்டெல் (Airtel) நிறுவனம், இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் நெட்ஃப்ளிக்ஸ் நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சேவைகளுடன் இணைக்கப்பட்ட பல்வேறு விருப்பங்களையும் இப்போது வழங்க துவங்கியுள்ளது. செப்டம்பர் 2024 முதல் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களுடன் எந்த திட்டங்களில் எல்லாம் நெட்ஃப்ளிக்ஸின் கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற நிறுவனங்களும் திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும் ஏர்டெல் மக்களை தன் வசம் ஈர்க்க புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளது.
ஏர்டெல் ரூ. 1798 பிரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1798 Prepaid Plan):
ரீசார்ஜ் திட்டங்களுடன் நெட்ஃப்ளிக்ஸ் நன்மைகளைத் தேடுபவர்களுக்கு ஏர்டெல் ரூ. 1,798 பிரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1798 Prepaid Plan) சிறந்தது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு 3 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும், பயனர்கள் 64Kbps வேகத்தில் இணையத்தை பெறுவார்கள்.

இந்த திட்டத்தை தேர்வு செய்தால் 84 நாட்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் அடிப்படை திட்டத்தின் நன்மை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான அணுகல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 சர்க்கிள் நன்மை, வின்க் மியூசிக் மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் ஆகிய நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒரு நாளைக்கு சராசரிச் செலவு ஏறக்குறைய ரூ. 21 மட்டுமே.
ஏர்டெல் ரூ. 1399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Airtel Rs 1399 Postpaid Plan):
ப்ரீபெய்டு பயனர்களை போல், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக, ஏர்டெல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் திட்டங்களுடன் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாக்களை வழங்குகிறது. ஏர்டெல் ரூ. 1,399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Airtel Rs 1399 Postpaid Plan) ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டம் வழக்கமான இணைப்பு மற்றும் மூன்று கூடுதல் இணைப்புகளை வழங்குகிறது. மொத்தம் நான்கு இணைப்புகள் இதன் கீழ் அடங்கும்.
இது வரம்பற்ற குரல் அழைப்புகள், மாதத்திற்கு 240 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் மெயின் இணைப்புக்கு 150 ஜிபி மற்றும் ஒவ்வொரு கூடுதல் இணைப்புக்கும் 30 ஜிபி டேட்டா என்ற அளவில் டேட்டா வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக ஒரு மாத நெட்ஃப்ளிக்ஸ் அடிப்படை சந்தா கிடைக்கிறது.
இதர கூடுதல் நன்மைகளாக ஆறு மாத அமேசான் பிரைம் சந்தா, கூடுதல் செலவில்லாமல் ஒரு வருடம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, வின்க் பிரீமியம், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் உறுப்பினர் சந்தா மற்றும் விஐபி சேவை ஆகியவை அடங்கும்.
ஏர்டெல் ரூ. 1749 இன்ஃபினிட்டி பேமிலி பிளான் திட்டம் (Airtel Rs 1749 Infinity Family plan):
போஸ்ட்பெய்ட் பிரிவில் மற்றொரு விருப்பமாக ஏர்டெல் ரூ. 1,749 இன்ஃபினிட்டி பேமிலி பிளான் திட்டம் (Airtel Rs 1749 Infinity Family plan) வாங்க கிடைக்கிறது. இந்த திட்டம் ஒரு வழக்கமான மெயின் இணைப்பு மற்றும் நான்கு இலவச கூடுதல் இணைப்புகள் என்று மொத்தம் ஐந்து இணைப்புகளை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், மாதத்திற்கு 320 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இதில் மெயின் இணைப்புக்கு 200 ஜிபி மற்றும் ஒவ்வொரு கூடுதல் இணைப்புக்கும் 30 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் செய்யும் வசதியுடன் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. வெகுமதிகளில் ஒரு மாத நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டாண்டர்ட் சந்தா, ஆறு மாத அமேசான் பிரைம் உறுப்பினர், கூடுதல் செலவில்லாமல் ஒரு வருடம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, வின்க் பிரீமியம், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் உறுப்பினர், விஐபி சேவை ஆகியவை அடங்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பத்து அல்லது முப்பது நாட்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு சர்வதேச ரோமிங் பேக்குகளின் மீது ரூ. 3,000 வரை தள்ளுபடி பெற முடியும்.


Click it and Unblock the Notifications