அள்ளி வீசும் ஏர்டெல்.. பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. 84 நாட்கள் வேலிடிட்டி.. விட்றாதீங்க..
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக ஏர்டெல் (airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனம் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே தான் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) போன்ற சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications