Home
News

Airtel ரூ.1798 மற்றும் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. 84 நாள் வேலிடிட்டி.. OTT.. எதை தேர்வு செய்வது நல்லது?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது. எனவே தான் ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களின் திட்டங்களை விட ஏர்டெல் திட்டங்களில் பலர் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து விரைவில் அதிவேக செயற்கைக்கோள் இணையதள சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளன.

குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் செயற்கைக்கோள் இணையதள சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ரூ.1729 மற்றும் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இதில் எந்த திட்டம் அதிக சலுகைகள் வழங்குகிறது? எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Airtel ரூ.1798 மற்றும் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. OTT..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பல OTT சந்தா கிடைக்கும்

அதாவது பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட தரமான ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.

எது சிறந்து? அதிக டேட்டா மற்றும் நெட்பிளிக்ஸ் சந்தா மட்டும் போதும் என நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதேபோல் அதிக ஓடிடி சந்தா மற்றும் ஓரளவு டேட்டா நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ.1729 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. கிட்டத்தட்ட இரண்டு திட்டங்களும் அதிக சலுகைகளை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1798 and Rs 1729 Plans Advantages: Which is better to choose?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X