Home
News

அந்த மனசு இருக்கே.. ஒரே Airtel ரீசார்ஜ்.. 5 சிம் கார்டுக்கு வாய்ஸ் கால்கள்.. 200 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு அதிக விலை கொண்ட திட்டமாக ரூ.1749 மதிப்புள்ள திட்டம் இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான சலுகைகள் மட்டுமல்லாமல், 4 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுக்கிறது. இதுபோக ஓடிடி, மியூசிக், ஏஐ சாட்பாட் போன்ற கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தின் (Postpaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 1749 திட்ட விவரங்கள் (Airtel Rs 1749 Plan Details): இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தின் விலையுடன் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். ஆகவே விலை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால், சலுகைகளை பார்த்தால் இந்த விலை பரவாயில்லையே என்று கூட கஸ்டமர்களுக்கு தோன்ற வைக்கலாம். முதலில் பிரைமரி சிம் கார்டுக்கு கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.

அந்த மனசு இருக்கே.. ஒரே Airtel ரீசார்ஜ்.. 5 சிம் கார்டுக்கு வாய்ஸ்!

இந்தத் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls) கிடைக்கும். ஆகவே லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Local & STD Roaming Voice Calls) செய்யலாம். 200 ஜிபி டேட்டா சலுகை இந்த திட்டத்திற்கு கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகை நாள்தோறும் அனுப்ப கிடைக்கிறது.

இந்தத் திட்டத்தில் நான்கு பேமிலி சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம். இப்படி இணைக்கப்படும் சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கொடுக்கப்படும். தலா ஒரு சிம் கார்டுக்கு 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இது போக பிரைமரி சிம் கார்டில் இருந்து டேட்டாவை ஆட் செய்து கொள்ளலாம்.

ஆகவே, மொத்தமாக ஐந்து சிம் கார்டுகளுக்கு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஜிஎஸ்டி உடன் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு சிம் கார்டுக்கு ரூ.350 செலவாகிறது. இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வருவோம். இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் (Netflix Standard) சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக அமேசான் ப்ரைம் சந்தா (Amazon Prime) கிடைக்கிறது.

இந்த சந்தாவை ஆறு மாதங்களுக்கு போஸ்ட்பெய்டு கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரீமியம் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் (Airtel Xstream Play Premium) கிடைக்கிறது.

இது சலுகை மூலம் ஓடிடி பண்டில் சந்தாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, இதில் சோனிலிவ், சன்நெக்ஸ்ட், ஆஹா போன்ற கூடுதல் ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஓடிடி சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது இந்த போஸ்ட்பெய்டு திட்டம். மேலும், ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+) மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தவை கொடுக்கிறது.

கூகுள் ஒன் (Google One) அணுகல் மூலமாக 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதுபோக லேட்டஸ்ட் சலுகையாக கிடைக்கும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை ஏர்டெல் கஸ்டமர்கள் 12 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இறுதியாக ஸ்பேம் டிடெக்சன் சலுகை கிடைக்கிறது.

இந்த சலுகை மூலம் இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை எளிதாக டிடெக்ட் செய்து கொள்ளலாம். இப்படி ஒரே ஒரு திட்டத்தில் ஏகப்பட்ட சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்தத் திட்டம் அதிக விலை கொண்ட திட்டமாக இருப்பதால், அதிக சிம் கார்டுகளை ஆட் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1749 Plan With 200GB Data Unlimited Voice Call 4 SIM Cards Add Check Costly Postpaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X